``விஷால் ஏன் நிதியுதவி எதுவும் பண்ணலை தெரியுமா?'' - ஆர்.கே.செல்வமணி

22-05-2020 09:12 AM

``எந்த சினிமாக்காரனும் திடீர்னு வானத்துல இருந்து குதிச்சவங்க கிடையாது. மக்களான உங்ககிட்ட இருந்து வந்த பிரதிநிதிகள்தான். எல்லாருமே ஒரு ஜான் வயித்துக்காகத்தான் உழைக்குறாங்க.''

சினிமா ஷூட்டிங் விரைவில் தென்மாவட்டங்களில் தொடங்க வாய்ப்பிருக்கிறது எனப் பேச்சுகள் வரும் நிலையில் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பேசினேன்.

``இந்த இக்கட்டான நேரத்துல மக்கள்ல சிலர் சினிமா ஷூட்டிங்கிற்கு என்ன அவசரம்னு கேட்டுட்டு இருக்காங்க. ஆனா, இந்த லாக்டெளன் நேரத்துல 24 மணி நேரமும் பல தளங்களின் வழியா சினிமாவைத்தான் பார்த்துட்டிருக்காங்க. தியேட்டர் இல்லாமலே இது நடந்துட்டிருக்கு. மக்களை ஓரளவுக்கு சினிமாதான் சந்தோஷமா வெச்சிட்டிருக்கு. அதனால, இந்த சினிமா மேல கொஞ்சம் அன்பும், அபிமானமும், அனுதாபமும் வெச்சிக்கிட்டா நல்லா இருக்கும். சினிமால இருக்குற எல்லாரும் கோடீஸ்வரன் கிடையாது. 50 பேர்தான் கோடீஸ்வரனா இருப்பான். மீதி இருக்கவங்க தினசரி கூலிங்க. தினமும் ஷூட்டிங் போனாதான் வீட்டுல உலை கொதிக்கும். எல்லாரையும் ரஜினி, கமல், விஜய், அஜித்தா நினைச்சிட்டிருக்காங்க. பழைய நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், நாகேஷ் மேல அன்பும், அபிமானமும் வெச்ச மாதிரி இப்ப இருக்குற சினிமாக்காரங்க மேலயும் வெச்சா நல்லாயிருக்கும். எந்த சினிமாக்காரனும் திடீர்னு வானத்துல இருந்து குதிச்சவங்க கிடையாது. மக்களான உங்ககிட்ட இருந்து வந்த பிரதிநிதிகள்தான். எல்லாருமே ஒரு ஜான் வயித்துக்காகத்தான் உழைக்குறாங்க.Trending Now: