40 நாட்கள் நிர்வாணமாக்கி பூஜை செய்த சாமியாரை அடித்து உதைத்து கம்பத்தில் கட்டிய மக்கள் !

20-05-2020 11:25 AM

ஆந்திராவில் ஓங்கோல் என்றும் பகுதியில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் ஒருவர் வீட்டில் பணம் அதிகம் கூட வேண்டும் என்பதற்காக ஒரு பூஜையை செய்துள்ளார். சாமியாரின் பேச்சை நம்பி நம்பி பலர் அவரிடம் சென்று அவர் சொல்வதை பின்பற்றியுள்ளனர்.

40 நாட்களுக்கும் மேலாக நிர்வாணமாக்கி பூஜை செய்துள்ளார். இதில் ஒரு சிறுமிக்கு பிரசாதத்தில் மயக்க மருந்தை வைத்து தனி அறைக்கு கூட்டிச் சென்று பல நாட்கள் வைத்து பாலியல் சீண்டல் ஈடுபட்டுள்ளார். முதலில் அந்த சிறுமியை பேய் பிடித்தது என்று இந்த செயலை செய்துள்ளார்.

விசாரணையில் சாமியார் தெலுங்கான மாவட்டத்தை சேர்ந்த கஜாலா விஷ்ணு என்பவர் என்பது தெரியவந்துள்ளது. சிறுமியின் தந்தையிடம் உங்கள் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்றால் இதை செய்ய வேண்டுமென 40 நாளைக்கு அனைவரையும் நிர்வாணமாக்கி இந்த வேலையை செய்துள்ளார்.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட செய்தி ஊர் பெரியவர்களுக்கு தெரியவந்ததும் அந்த நபரை ஊர் மக்கள் அடித்து கம்பத்தில் கட்டினர். மேலும் அந்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.Trending Now: