கம்பெனிகளுக்கு நிதி திரட்ட அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு பதிவுகளை மாற்றுகிறது சீனா

19-05-2020 07:18 PM

லண்டன்

உலக நாடுகளில் நிதி திரட்டுவதற்காக அமெரிக்காவிலுள்ள பங்குச்சந்தை அமைப்புகளில் பதிவு செய்திருந்த சீனா தன்னுடைய நாட்டு கம்பெனிகளின் பதிவுகளை எல்லாம் லண்டனுக்கு மாற்ற நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் நாளுக்கு நாள் முற்றி வரும் நிலையில் கரோனா வைரஸ் தொற்று பிரச்சனையும் இப்பொழுது புதிதாக சேர்ந்துள்ளது. அதனால் சீன கம்பெனிகளின் வெளிநாட்டு மூலதனம் திரட்டுவதற்கான முயற்சிகளை எல்லாம் லண்டனுக்கு மாற்ற சீனா திட்டமிட்டுள்ளது. ஜி டி ஆர் என்றழைக்கப்படும் குளோபல் டெப்பாசிட்டரி ரிஷி மூலம் வெளிநாடுகளில் பணம் திரட்டும் முயற்சிகளை இனிமேல் லண்டனிலிருந்து மேற்கொள்ள சீனா முடிவு செய்துள்ளது. அதற்காக லண்டன் ஸ்டாக் எக்சேஞ்ச் சீனக் கம்பெனிகளின் பதிவுகளை மாற்ற நடவடிக்கைகளை துவக்கி உள்ளது.

அமெரிக்காவிலுள்ள பங்கு சந்தைகளில் இருந்து பதிவுகளை லண்டன் ஸ்டாக் எக்சேஞ்ச் மாற்ற விண்ணப்பிக்கும்படி சீன அரசு அறிவித்துள்ளது.

சீனாவிலுள்ள ஷாங்காய் நகரம் பங்குச் சந்தைகளுக்கும் லண்டனிலுள்ள பங்குச் சந்தைக்கும் இடையே கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நேரடித் தொடர்புகள் உருவாக்கப்பட்டன. இந்த நேரடித் தொடர்பை வலுப்படுத்த சீன அரசு தற்பொழுது விரும்புகிறது.

சீன கம்பனிகளின் பங்குகளை லண்டன் பங்குச் சந்தையில் விற்க சீன அரசு அனுமதிப்பது, தன்னுடைய மூலதனச் சந்தையை வெளி மூலதனத்துக்கு இன்னும் அதிகமாக திறக்க சீனா தயாராகி வருகிறது என்பதை காட்டுகிறது என்று சீன பொருளாதார நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நியூயார்க் பங்குச் சந்தை மற்றும் நாஸ்டாக் பங்குச் சந்தை ஆகியவை லண்டன் பங்குச் சந்தையை விட கூடுதல் வசதிகளுடனும் நிதி திரட்டுவதற்கு மேம்பட்ட வாய்ப்புகளும் உள்ளது. ஆனாலும் அவற்றை விட தற்போதுள்ள சூழ்நிலையில் லண்டன் பங்குச் சந்தையே சிறந்தது என சீனா கருதுகிறது

நாஸ்டாக் மற்றும் நியூயார்க் பங்குச் சந்தைகளில் சீனாவின் 196 பெரிய கம்பெனிகள் இன்னும் தங்கள் பங்குகளை விற்று வருகின்றன. அந்தப் பங்குச் சந்தைகள் மூலம் கூடுதல் மூலதனம் திரட்டி வருகின்றன.

லண்டன் ஷாங்காய் நிதி தொடர்பு மிக மிக மெதுவாக வளர்ந்து வருகிறது ‌.Trending Now: