கொத்தவரங்காயும் அதன் மருத்துவமும்

15-05-2020 10:11 AM

அந்த காலத்தில் பழைய சாதமும் கொத்தவரங்காய் வத்தலும் சாப்பிட்டவர்கள்  நல்ல ஆரோக்கியத்துடன்   இருந்தார்கள் . ஆனால் நாம் தான்  நாகரிகம் என்று சொல்லி கொண்டு நம் பழைய உணவு முறைகளை மறந்து தினமும் ஒரு நோயையை தேடி ஓடி கொண்டு இருக்கிறோம்.

இங்கே நாம் பார்க்க போவது  அதிக மருத்துவ குணம் நிறைந்த கொத்தவரங்காய்

இதில் ஏராளமான வைட்டமின் மற்றும் தாது உப்புகள் நிறைந்தகால்சியம்,  மெக்னீசியம் ,பாஸ்பரஸ் ,பொட்டாசியம் இரும்பு சத்து ஆகியவை உள்ளன.. மேலும் குறைந்த எறி சக்தி அதிக நார்சத்து,  ப்ரோடீன் , கார்போஹைட்ரெட் முதலியவையும்   காணப்படுகின்றன. அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள கொத்தவரங்காவை   ஏன்? ,  எதற்கு?  யாரெல்லாம்  சாப்பிட  வேண்டும்  என்று காணலாம்.

இதில் உள்ள   கிளைகோ நியூட்ரின்கள்  ரத்தத்தில்  உள்ள  சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றது .எனவே சர்க்கரை நோயுற்றவர்கள் இதனை உட்கொண்டு அற்புதமான ஆற்றலை பெற முடியும்.

என்ன செய்தாலும் சர்க்கரையின் அளவை குறைக்க முடியவில்லை என்பவர்கள்   கொத்தவரங்காய் 100 கிராம் எடுத்து கொண்டு அத்துடன்  200ml தண்ணீர் சேர்த்து   முந்தைய   நாள்  வேக வைத்து  அடுத்த நாள் காலையில் உப்பு சேர்க்காமல் அந்த தண்ணீரை அருந்த வேண்டும்.

இதில் உள்ள கால்சியம் ஆனது எலும்புகளை பலப்படுத்த உதவும், மெக்னீசியம் எலும்புக்கு வலுவூட்டி  அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

எனவே இதனை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் பற்களையும் எலும்புகளையும் பலமாக வைத்து கொள்ள  உதவுகிறது .  

மேலும் இது கலோரி அளவுகளை  குறைவாக கொண்ட உணவாக இருந்தாலும் , விட்டமின்களையும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும்  உணவாக கருதப்படுவதால்  உடம்பு குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதனை அடிக்கடி சாப்பிட்டு வரலாம் .

அதே போன்று  ரத்தத்தின் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க பயன் படுத்தப்படுகிறது.

இதனால் உயர் ரெத்த அழுத்தம் குறைக்கபட்டு மாராடைப்பு உள்ளிட்ட நோயிகள் குறைக்கப்படுகின்றன .இதில் உள்ள நார் சத்து சிவப்பு அணுக்களை அதிகரிக்கிறது .இதனால் ஆக்ஸிஜன் உள் இழுக்கும் திறன் அதிகரிக்கிறது. கொத்தவரங்காய் சாப்பிட்டு வர சீரான ரெத்த ஓட்டத்தை பெற முடியும்.

முக்கியமாக இதில் காணப்படும் போலட்டுகள் கருவில் இருக்கும் குழந்தை குறைபாடின்றி வளர உதவுகின்றன .இக்காயில் காணப்படும்

இரும்பு சத்து மட்டும் கால்சியம் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.

மேலும் இது மலம் இலக்கியாக செயல்படுகிறது .செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேத்த உதவுகிறது .எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால்  நல்ல செரிமானத்தை செய்வதோடு மல சிக்கலிலிருந்து  விடுபட உதவுகிறது.

மேலும் கொத்தவரங்காய் சாப்பிடும் பொழுது மூளை மட்டும் நரம்புகள்  அமைதி படுத்த படுகின்றன. இதனால் மன அமைதி உண்டாகிறது. மேலும்  சருமத்தில் உள்ள இறந்த செல்களை  அழித்து புதிய செல்களை உருவாகும் தன்மை கொண்ட ஆன்டி ஆக்ஸிடன்ட் இதில் உள்ளது .  

எனவே கொத்தவரங்காய்-இல் இருந்த  மருத்துவ குணங்கள்  இதுவரை தெரியாமல் இருந்த்தால் இப்பொழுது அறிந்திருப்பீர்கள் .

வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து கொள்ளுங்கள் .நோய் அற்ற  வாழ்க்கை வாழுங்கள் ..

Trending Now: