இந்திய பங்குச்சந்தை இ்ன்று புதிய உச்சத்தை தொட்டது

13-05-2020 07:26 PM

மும்பை,

இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 637 புள்ளிகள், நிப்டி 187 புள்ளிகள் இன்று உயர்வுடன் நிலைபெற்றது.

பிரதமர் மோடி நேற்று கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து பொருளாதார மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக அறிவித்தார். அதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் பெரிய ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கியது. மேலும் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார்.

இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன.

இன்று மாலை வர்த்தகம் முடியும் பொழுது மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 637.49 புள்ளிகள் உயர்ந்து 32,008.61 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதைபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டியும் 187 புள்ளிகள் உயர்ந்து 9,383.55 புள்ளிகள் நிலைபெற்றது.

ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், எல் அண்டி டி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஸ்டேட் வங்கி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வைக் கண்டன.

பார்தி ஏர்டெல், சன்பார்மா மற்றும் நெஸ்லே இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன
Trending Now: