ஊரடங்கு உத்தரவு - புதிய நேரக் கட்டுப்பாடு தமிழ்நாட்டில் இன்று முதல் அமலாகிறது

29-03-2020 09:42 AM

சென்னை

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊடரங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காய்கறிச் சந்தைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள் ஆகியவை காலை 6:30 மணியிலிருந்து பிற்பகல் 2:30 மணி வரை மட்டுமே இயங்கும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தும், கொரோனா நோய்த் தொற்றின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் தேவையின்றி சாலைகளில் பொதுமக்கள் நடமாடுவதைத் தடுக்க நேரக்கட்டுப்பாடு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு இன்று முதல் செயல்படுத்த உள்ளது. அதன்படி, கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி மற்றும் பழ அங்காடிகளுக்கு வரும் வாகனங்கள், மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருள்களை இறக்கி விட வேண்டும்.

கோயம்பேடு காய்கறி அங்காடி மற்றும் பிற காய்கறி விற்பனை கடைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள் ஆகியவை காலை 6:00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை திறந்திருக்க வேண்டும்.

மருந்தகங்களும், பார்சல்கள் மூலம் விற்பனை செய்து வரும் உணவகங்களும் எப்போதும்போல நாள் முழுவதும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

Swiggy, Zomato போன்ற நிறுவனங்கள் காலை 7:00 மணி முதல் 9.30 மணி வரையும், மதியம் 12:00 மணி முதல் பிற்பகல் 2.30 வரையும், மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் உணவுகளை எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதுTrending Now: