தொடர்ந்து மூன்றாது நாளாக இந்திய பங்குச்சந்தை உயர்வு

26-03-2020 06:03 PM

மும்பை,

   கடந்த மூன்று நாட்களாக இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,410.99 புள்ளிகளும், நிப்டி 323 புள்ளிகள் உயர்வுடன் இன்று நிலைபெற்றது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் தொழில்துறை முடங்கி உள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன.

முழு அடைப்பினால் வேலை வாய்ப்புகளை இழந்த ஏழைகள், கூலித் தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்துள்ளார்.

இதன் எதிரொலியாக இன்று மாலை வர்த்தகம் முடியும் பொழுது மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1410.99 புள்ளிகள் உயர்ந்து 29,946.77 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதைபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டியும் 323.60 புள்ளிகள் உயர்ந்து 8,641.45 புள்ளிகள் நிலைபெற்றது.

இண்டஸ்இண்ட் வங்கி இன்று ஒரே நாளில் 45 சதவீதம் அதிகரித்தது. பாரதி ஏர்டெல் 11 சதவீதமும், லார்சன் அண்ட் டூப்ரோ 10 சதவீதமும், பஜாஜ் பைனாஸ் 8 சதவீதம் உயர்ந்தன.

  

\

.Trending Now: