கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் உறைந்த உலகம்

26-03-2020 01:09 PM

உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய  கொரோனாவின் பாதிப்பால் உலகின் பல்வேறு நாடுகளில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மேலும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையோ 4 லட்சத்து 68 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இவர்களில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக சீனாவில் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றாலும் அதற்கு அடுத்தாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள்   கொரோனாவின் பாதிப்பால் பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நெதர்லாந்தில் ஒரே நாளில் 80 பேரும், பெல்ஜியத்தில் 56 பேரும் உயிரிழந்துள்ளனர். இதோடு நெதர்லாந்தில் இதுவரை 356 பேரும், பெல்ஜியத்தில் 178 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்

 இங்கிலாந்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 43 உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு இதுவரை 465 பேர் பலியாகி உள்ளனர். மேலும் அங்கு புதிதாக ஆயிரத்து 450 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

லிபியாவில் முதல் நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எமிட் பின் ஒமர் அதிகாரபூர்வமாக தெவித்துள்ளார்.Trending Now: