உடல் வலிமை தரும் அவல் புட்டு சமையல்

25-03-2020 02:29 PM

தேவையான பொருட்கள் :

சிவப்பு அவல் - 1 கப்,

 நாட்டுச் சர்க்கரை (அ) வெல்லத்தூள் - 1/2கப்,

 தேங்காய்த்துருவல் - 2 மேஜைக்கரண்டி,

 ஏலக்காய்த்தூள்- 1 சிட்டிகை,

 வறுத்த முந்திரி, உலர் திராட்சை - தலா 1 தேக்கரண்டி,

 நெய்- 2 தேக்கரண்டி.

செய்முறை :

வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் அதில் அவலை வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.

பொடித்த அவலுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்து, அரை கப் சுடுநீர் தெளித்து நன்கு பிசிறவும். இதை ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு, நன்கு ஆறியபின் உதிர்த்து, நெய், நாட்டுச் சர்க்கரை (அ) வெல்லத்தூள் சேர்த்துப் பிசிறி முந்திரி, உலர்திராட்சை சேர்க்க வும். சுவையான அவல் புட்டு தயார்.Trending Now: