ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்: 7.5 ஆக பதிவு

25-03-2020 01:42 PM

மாஸ்கோ,

ரஷ்யாவின் குரில் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “ரஷ்யாவின் குரில் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 56.7 கிலோ மீட்டர் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்குக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குரில் தீவில் அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஹவாய் தீவுகளையும் சுனாமி அலைகள் தாக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டது.

சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் குரில் தீவுப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட முழுமையான பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை

Trending Now: