வீட்டில் தனித்திருக்கும் உத்தரவை மீறிய சென்னை சிவில் என்ஜினியர்மீது போலீசார் வழக்கு

25-03-2020 01:40 PM

சென்னை

தமிழ்நாட்டில் வீட்டில் தனிமைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபிறகு கோடம்பாக்கம் சிவில் என்ஜினீயர் ஒருவர், அந்த உத்தரவை மீறி வீட்டிலிருந்து வெளியேறியதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை - கோடம்பாக்கத்தில் சிவில் இன்ஜினியர் கோவிட்-19  வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ரியல் எஸ்டேட் பிசினசில் ஈடுபட்ட அவர் பலமுறை துபாய் சென்று திரும்பியவர். சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கும் பொழுது அவருக்கு மருத்துவ சோதனை நடந்தது.

கோவிட்-19 வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது ஆனால் சோதனையில் உறுதி செய்யப்படவில்லை. அதைத்தொடர்ந்து மருத்துவ உதவி அதிகாரி அவரை வீட்டில் தனிமைக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

அவரைக் கண்காணிக்க கோடம்பாக்கம் சிவில் இன்ஜினியர் வீட்டுக்கு கடந்த மார்ச் மாதம் 21, 22, 23 தேதிகளில் மருத்துவ உதவி அதிகாரி சுகன்யா தேவி தொடர்ந்து சென்றார். ஆனால் அவர் வீட்டில் இல்லை. அதைத் தொடர்ந்து உதவி மருத்துவ அதிகாரி கோடம்பாக்கம் போலீஸாரிடம் வழக்கு ஒன்று பதிவு செய்தார். போலீஸார் அவருக்கு எதிராக வழக்கு பதிவுசெய்து செய்தனர்.

அவரை கண்டுபிடித்து விசாரித்தபோது தொழில் நிமித்தம் வெளியே சென்றதாக அவர் பதிலளித்தார். மீண்டும் ஒருமுறை அவர் வீட்டை விட்டு வெளியேறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கடுமையாக எச்சரித்தனர்.Trending Now: