வைரலாகும் நயன்தாராவின் - விக்னேஷ் சிவன் டிக் டாக் வீடியோ

22-03-2020 11:53 PM

நடிகர் நடிகையர்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று மாலை 5 மணிக்கு மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். இதனை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் நயன்தாரா, மற்றும் விக்னேஷ் சிவனின் டிக்டாக் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் இருவரும் பலவித எமோஜிகளை ஒன்றாக கைகள் மூலம் செய்து காட்டுகின்றனர். இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து இருவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending Now: