அகதி சிறுவன் மரணத்திற்கு காரணமான மூவருக்கு 125 ஆண்டு சிறை

20-03-2020 01:10 PM

சிரிய அகதிகள் சென்று படகு துருக்கி கடலில் கவிழந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த குழந்தை அலன் குர்தியின் சடலம் கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் இருந்தது. அனைத்து நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த குர்தியின் புகைப்படம், உலக மக்களின் மனச்சாட்சியை தட்டி எழுப்பியது.  

2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி துருக்கி கடற்கரை யில் உயிரற்று கிடந்த சிறுவனின் புகைப்படம் வெளியானது. அந்த இளம் பிஞ்சின் பெயர் அலன் குர்தி. சிரியாவைச் சேர்ந்த சிறுவனும், அவனது குடும்பத் தாரும் அகதியாக தஞ்சம் கோரி படகில் வந்துள்ளனர். அந்த படகு கவிழவே, அதில் பலர் பலியானார்கள். அதில் பலியான சிறுவன் அலன் குர்தியின் உடல் துருக்கி கடற்கரையில் கரை ஒதுங்கியது. அகதிகளின் துயரங்களை எடுத்துக்காட்டும், இந்த புகைப்படம் உலக அளவில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.

சிறுவன் அலன் குர்தி உட்பட பலரை சட்டவிரோதமாக படகில் அழைத்துச் சென்றதாக, படகை இயக்கிய மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது துருக்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஐந்து வருடங்களாக நடந்து வந்த வழக்கில். சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த படகை இயக்கிய மூவருக்கு 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  
Trending Now: