கிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபர்

20-03-2020 01:10 PM

கிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக கேத்ரினா சாகெல்லரோபவ்லு பதவி ஏற்றுள்ளார். இவர் அந்நாட்டின் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக இருந்தவர். இந்நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் சென்ற ஜனவரி மாதம் நடைபெற்றது. அப்போது பிரதமர் கிரியாகோஸ் மிட்சோதாகிஸ், கட்சி சார்பற்ற வேட்பாளராக கேத்ரினா பெயரை அறிவித்தார். முக்கிய மற்ற கட்சிகளும் கேத்ரினாவுக்கு ஆதரவு அளித்தன. மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

ஒரு மனதாக அதிபராக தேர்ந் தெடுக்கப்பட்ட கேத்ரினா புதிய அதிபராக பதிவியேற்றார். கொரனா வைரஸ் அச்சம் காரணமாக எளிமையாக பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
Trending Now: