சின்ன சின்ன டிசைன் சிறகடிக்கும் டிசைன் – குட்டிக்கண்ணன்

18-03-2020 07:17 PM

 கேஷு­வல் உடை­கள் என்­றாலே ஜீன்ஸ், டி-ஷர்ட்­தானா? ஒரே ஒரு டெனிம் பேன்ட். அதுக்கு பெண்­க­ளுக்கு பிங்க் டி-ஷர்ட்னு சட்­டுனு கிளம்­பி­டு­வாங்க. ஆனா, கேஷு­வல் அவுட் பிட்­னாலே இந்த கிளா­சிக் காம்போ மட்­டும்­தானா? இவை தவிர புதுசா என்ன டிரை பண்­ற­துன்னே தெரி­ய­லையா..? எவர்­கி­ரீன் கேஷு­வல் உடை­யான ஜீன்ஸ், டி-ஷர்ட் காம்­போ­வுக்­குப் போட்­டி­யாக பல ரகங்­க­ளில் கேஷு­வல் உடை­கள் வந்­து­விட்­டன. பெண்­க­ளுக்­கும் சவு­கரி­ய­மான, அதே நேரம் ஸ்மார்ட் லுக் தரும் டிரெண்­டி­யான கேஷு­வல் உடை­க­ளைப் பற்றி விவ­ரிக்­கி­றார் காஸ்ட்­யூம் டிசை­னர் செந்­தா­மரை.

1. லாங் ஸ்கர்ட் - கேஷு­வல் டாப்!

முழு நீள ஸ்கர்ட், முழங்­கால்­வரை நீளும் ஸ்கர்ட், முட்­டி­வரை நீளும் ஸ்கர்ட் என இந்த மூன்று அள­வி­லான ஸ்கர்ட்­க­ளு­டன் கேஷு­வல் காட்­டன் டாப்ஸ், டி-ஷர்ட் என எதை­யும் மேட்ச் செய்து அணி­ய­லாம். நீங்­கள் அணி­யும் டாப்ஸை ஸ்கர்ட்­டு­டன் டக் இன் செய்­தும் அணி­ய­லாம். இத­னு­டன் சாண்­டல் மற்­றும் பிளிப் பிளாப் வகை கால­ணி­களை அணி­வது வழக்­கம். ஆனால் தற்­போது ஸ்கர்ட்­டு­டன் ஸ்னீக்­கர்ஸ், கேன்­வாஸ் போன்ற ஷூக்­களை அணி­வ­து­தான் ஸ்டைல் ஸ்டேட்­மென்ட்.

2. திரீ பீஸ் டிரெண்ட்!

ஜெகிங்ஸ் பேன்ட்­டு­டன் டி-ஷர்ட் அல்­லது டேங்க் டாப் அணிந்து, அதன் மேல் ஜாக்­கெட் என, திரீ பீஸ் டிரெஸ் இப்­போ­தைய டிரெண்­டில் இருக்­கி­றது. ஜெகிங்ஸ் என்­றில்­லா­மல் ஆங்க்­கிள் லெங்த் டெனிம் பேன்ட்­டு­ட­னும் இந்த ஸ்டைலை டிரை செய்­ய­லாம். டெனிம் ஜாக்­கெட், லெதர் ஜாக்­கெட், ஹூடட் ஜாக்­கெட் என வெரைட்­டி­யான ஜாக்­கெட்­க­ளை­யும் டிரை செய்­ய­லாம். வியர்­வைத் தொந்­த­ரவு இருப்­ப­வர்­கள் இந்த ஸ்டைலைத் தவிர்க்­க­லாம்.

3. ஜம்ப் ஸூட்!

பொது­வா­கக் கைக்­கு­ழந்­தை­க­ளுக்­கான உடை­யான `ஜம்ப் ஸூட்', தற்­போ­தைய டீன் ஏஜ் பெண்­க­ளின் பேவ­ரைட் உடை­யாகி வரு­கி­றது. பேஷன் பாலோ­ய­ரா­கத் தங்­களை வெளிப்­ப­டுத்த நினைப்­ப­வர்­க­ளுக்­கான பெஸ்ட் சாய்ஸ் இது. ஆனால் தொப்பை உள்­ள­வர்­கள் இதைத் தவிர்க்­க­வும். இந்த உடை தொப்­பையை வெளிப்­ப­டுத்­திக் காட்­டிக்­கொ­டுத்­து­வி­டும்.

4. ஒன் பீஸ் டிரெஸ்!

`என்­ன­தான் டிரெண்­டுல இருந்­தா­லும் எனக்கு கம்­பர்ட்­தான் முக்­கி­யம்' என்று நினைப்­ப­வர்­க­ளுக்­கான உடை­தான், `ஒன் பீஸ்' டிரெஸ். இதில் புல், திரீ போர்த், முட்டி வரை நீளும் டிரெஸ் என, விருப்­ப­மான மாடல்­க­ளில் வாங்­கிக்­கொள்­ள­லாம். நல்ல தர­மான காட்­டன் மெட்­டீ­ரி­ய­லில் ஒன் பீஸ் டிரெஸ் அணிந்­தால் சவு­கர்­யம் மட்­டு­மல்­லா­மல் சம்­ம­ரி­லும் கூலாக வலம்­வ­ர­லாம்.

5. டாம் பாய் லுக்!

டிராக் பேன்ட்­டு­டன் ஹூடட் டி-ஷர்ட், ஆங்க்­கிள் பிட் பேன்ட்­டு­டன் முழுக்கை `ஸ்வெட்' டி-ஷர்ட் போன்­றவை, டாம் பாய் மற்­றும் ஸ்போர்ட்டி லுக் பிரி­யர்­க­ளுக்­கான பெஸ்ட் சாய்ஸ். மேக்­கப், ஹேர்ஸ்­டைல் என்று மெனக்­கெட விரும்­பாத லேஸி கேர்ள்­ஸுக்­கான பெஸ்ட் சாய்ஸ் இது.Trending Now: