இளநீர் சூப்!

18-03-2020 01:28 PM

தேவை­யான பொருட்­கள்:

இள­நீர் - 1

எண்­ணெய் - 2 தேக்­க­ரண்டி

துரு­விய கேரட் - 2 தேக்­க­ரண்டி

நறுக்­கிய பீன்ஸ் - 2 தேக்­க­ரண்டி

காய்ச்­சிய பால் - 2 தேக்­க­ரண்டி

கறுப்பு, வெள்ளை மிளகு துாள், உப்பு - தேவை­யான அளவு.

செய்­முறை:

இள­நீர் வழுக்­கையை, கால் கப் இள­நீ­ரு­டன் சேர்த்து விழு­தாக அரைக்­க­வும்.

கடா­யில் எண்­ணெய் காய்ந்­த­தும் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்­றாக வதக்­க­வும். அதில் அரைத்த விழுது, வெள்ளை, கருப்பு மிளகு துாள், உப்பு மற்­றும் மீதி­யுள்ள இள­நீர் சேர்த்து, கொதிக்க விட­வும்.

நன்­றாக கொதித்­த­தும், பால் ஊற்றி கிளறி இறக்­க­வும். சுவை­யான, 'இள­நீர் சூப்' தயார். மிக­வும் சுவை­யாக இருக்­கும். சிறு­வர், சிறு­மி­யர் விரும்பி குடிப்­பர்.

- எம்.மகா­லட்­சுமி, கோவை.Trending Now: