பாட்டிமார் சொன்ன கதைகள் – 260 – சுதாங்கன்

18-03-2020 01:23 PM

வாழ்க்கையே ஒரு சூதாட்டம்!

` திரு­தி­ராஷ்ட்ர புத்­தி­ரர்­களை இகழ்­வது தான் இவ­ருக்கு வேலை. பாம்பை மடி­யில் வைத்­துக் கொஞ்­சு­வது போல் இவரை வளர்த்து வந்த மகா­ரா­ஜா­வுக்கு இவ்­வ­ள­வும் வேணும். இந்த ராஜ துரோ­கியை பாவி­யென்று யாரும் சொல்­வ­தில்­லையே! அத­னாலே தான் இவர் பாவத்­திற்கு அஞ்­ச­வில்­லையோ?  வெட்­க­மும் இல்­லையோ?’ என்று சகு­னி­யும் தன் அபிப்­ரா­யாத்­தைத் தாரா­ள­மாக வெளி­யிட்­டான். `` அதிர்ஷ்­ட­மில்­லா­த­வன் பாவி! அதிர்ஷ்­ட­சா­லியே புண்­ணி­யாத்மா! வாழ்க்­கையே ஒரு சூதாட்­டம்! என்று எண்­ண­மிட்­டான்  துரி­யோ­த­னன்.

 சகுனி தர்­ம­புத்­தி­ர­ரைப் பார்த்­து`­குந்தி புத்­தி­ரனே! தோற்­காத திர­வி­யம் இருக்­கு­மா­னால், பந்­த­யம் வை ‘’ என்­றான். அவர், ` பதி­னா­யி­ரம், பத்து லட்­சம், கோடி, நூறு கோடி, ஆயி­ரம் கோடி, லட்­சம் கோடி, கோடி கோடி!’ என்­றெல்­லாம் வைத்­துக் கொண்டே போனார். ` ஜயித்­தா­யிற்று! ஜயித்­தாய்­விட்­டது' என்று சொல்­லிக் கொண்டே போனான் சகுனி.  தர்­ம­புத்­தி­ரர், ஆட்­டத்­திலே வெறி கொண்­ட­வ­ராய், ` நக­ர­மும், தேச­மும் பிர­ஜை­க­ளும் பந்­த­யம்' என்­றார். உடனே `ஜயித்­தா­யிற்று ‘ என்று பதில் வந்­தது.

 மேலும் கூறிக் கொண்டு தம்­பி­மார்­க­ளை­யும் பந்­த­ய­மாக வைத்து, ` இந்த ராஜ­கு­மா­ரர்­கள் என்­னு­டைய பொருள் !’ என்று ஆடி­னார் தர்­ம­புத்­தி­ரர். ` இன்­னும் யாரை வைத்து ஆடப் போகி­றாய்? வேண்­டா­த­வைப் போலத் தம்­பி­ய­ரை­யும் ஆடித் தொலைத்­து­விட்­டாயே? தர்­ம­னு­டைய இந்த ஆவே­சம்­தான் தர்­மா­வே­சமோ?’ என்று காய்­களை உருட்­டி­னான் சகுனி.  ` மூடா! எங்­க­ளுக்­குள் மித்­தி­ர­பே­தம் செய்­யப்­பார்க்­கி­றாயா? பாவி!’ என்று விச­னித்­தார் தரு­மர். உடனே துரி­யோ­த­னன், ` அவர்­கள் இனி எங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்! எங்­க­ளுக்கு வச­மா­ன­வர்­கள்; எங்­க­ளால் ஜயிக்­கப்­பட்டு எங்­க­ளுக்கு அடி­மை­யா­கி­விட்­டார்­களே! என்று  பட­ப­டப்­பாய் பேசி­னான். சகு­னியோ அவ­னைத் தடுத்து, ` தரு­மன் மூத்­த­வன்; சிறந்­த­வ­னா­க

­வு­மி­ருக்­கி­றான்! அவனை நீ கோபிக்­க­லா­காது ‘’ என்று சொல்­லி­விட்­டுத் தரு­மனை நோக்கி, `பக்த சிரேஷ்­டனே! நமஸ்­கா­ரம் சூதா­டு­கி­ற­வர்­கள் வரம்பு கடந்து பிதற்­று­வது இயல்­பு­தானே! உனக்­குத் தெரி­யா­ததா? பொறுத்­துக்­கொள்' என்று சமா­தா­னம் சொன்­னான்.

 அப்­ப­டிச் சொல்­லிக்­கொண்டே அலட்­சி­ய­மாக, `இன்­னும் பந்­த­யத்­துக்கு யார் இருக்­கி­றார்? நீ இன்­னும் தோற்­காத திர­வி­யம் இருக்­கு­மா­னால், சொல்லு' என்று மெள்­ளக் கேட்­டான்.. தர்­ம­புத்­தி­ரர்  தம்­மையே பந்­த­ய­மாக  வைத்து ஆடி­னார். `உன்­னை­யும் நீ தோற்­றாய்! ஆனால் மற்ற பொருள் இருக்­கும் போது உன்னை நீ தோற்­றது பாவம்’ என்று சொல்­லிக்­கொண்டே சகுனி சிந்­தை­யில் ஆழ்ந்­தான் சிறிது நேரம்.  ` அடடா ! என்ன தவறு ! எப்­போ­தும் சர்வ ஜாக்­கி­ர­தை­யா­க­வும் முன் யோச­னை­யு­ட­மும் நடந்து கொள்­ளும் பழக்­க­முள்ள நானும் அயர்ந்து போனேனே ! என்று தனக்­குள் தானே சொல்­லிக் கொண்­டான்.  எனி­னும், தன்­னைத் தானே தைரி­யப்­ப­டுத்­திக்­கொண்டு தர்­ம­புத்­தி­ரரை நோக்கி,  "அரசே! நீ தோற்­காத பந்­த­யம் ஒன்று இருக்­கி­றதே!’ என்­றான் கொஞ்­சும் குர­லில்

 தர்­ம­புத்­தி­ரர் "அப்­படி என்ன இருக்க முடி­யும்?'' என்று திகைத்­தார். `` தர்மா! உன் தர்ம பத்­தினி அதிர்ஷ்­ட­முள்­ள­வள் அவ­ளால் உன்­னை­யும், சகோ­த­ரர்­க­ளை­யும், மீட்­டுக்­கொள்' என்­றான் சகுனி. தர்­ம­புத்­தி­ரர் திடீ­ரென்று "மகா­லட்­சு­மிக்கு ஒப்­பா­ன­வ­ளும் நற்­கு­ணங்­கள் நிரம்­பி­ன­வ­ளு­மான பாஞ்­சா­லி­யைப் பந்­த­யம் வைக்­கி­றேன். ஐயோ!’ என்று கத­றி­னார். "சீ! சீ!’ என்ற சொற்­கள் சபை­யி­லி­ருந்து வெளிப்­பட்­டன. துரோ­ண­ரும் கிரு­ப­ரும் கண்­ணீர் வடித்­தார்­கள். விது­ரர் தலை­யைப் பிடித்­துக் கொண்டு உயிர் போன­வர் போலி­ருந்­தார். பீமன் முத­லான சகோ­த­ரர்­கள் சர்ப்­பங்­கள் போல பெரு­மூச்­சு­விட்­டார்­கள். அர­சர்­கள் பல­ரும் கலங்­கிப் போனார்­கள். `ஜயித்­தா­யிற்றா?’ என்று துரி­யோ­த­னன் ஆத்­தி­ர­மாய் கேட்­டான். ` ஆயிற்று!’ என்று ஆடி­னான் சகுனி, துச்­சா­த­னன் முத­லான கெள­ரவ சகோ­த­ரர்­கள் கட­க­ட­வென்று சிரித்­தார்­கள்.

 துரி­யோ­த­னன் தலை குனிந்­தி­ருந்த விது­ர­னைப் பார்த்து `வாரும் விது­ரரே !திரெ­ள­ப­தியை அழைத்து வாரும். வீட்டை விளக்க வேண்­டும். சீக்­கி­ரம் வரட்­டும்' என்று சொன்­னான். உடனே விது­ரன் தலை நிமிர்ந்து `ஐயோ! முட்­டாளே ! படு­கு­ழி­யில்  தொங்­கு­கி­றாயே. கயிறு கழித்­தைச் சுற்றி இறுக்­கிக் கொண்­டி­ருக்­கி­றதே! தெரி­ய­வில்­லையா! பாவி! கத்­தியை இலை­யென்று விழுங்­கும் ஆட்­டைப் போலி­ருக்­கி­றாய்! கெட்ட ஆசை மேலோங்­கு­கி­றது. வெள்­ளம் போலே. அந்த வெள்­ளம் எல்­லோ­ரை­யும் கொண்டு போகுமே! ஐயோ! ஐயோ!’ என்று புலம்­பி­னான்.

 துரி­யோ­த­னன் விது­ர­னைக் கொஞ்­ச­மும் லட்­சி­யம் செய்­யா­மலே, கொஞ்ச தூரத்­தில் நின்ற ஒரு தேர்ப்­பா­கனை அழைத்து, ` ஓ! பிரா­தி­கா­மியே! நீ போய் திரெ­ள­ப­தியை அழைத்து வா. இந்த விது­ரர் பயந்­தாங்­கொள்ளி ‘ என்று சொன்­னான். அப்­போது விது­ரன், ` சீ! என்ன ராஜாங்­கம்! என்ன வாழ்க்கை! சுரைக்­காய்­கள் அமிழ்­கின்­றன ‘ கற்­கள் மிதக்­கின்­றன ‘ என்று கத­றி­னான்.  பிரா­தி­காமி மட மட­வெண்டு அந்­தப்­பு­ரத்­திற்கு அருகே போய் "திரெ­ள­ப­தியே!’ என்று கூவி அழைத்­தான்.Trending Now: