‘சஹானா’தான் நான்! – ஹிம பிந்து

17-03-2020 12:47 PM

“‘சஹானா’ எப்­படி இருக்­கி­றாளோ, அப்­ப­டி­யே­தான் நானும்!” என்று சொல்லி சிரித்­தார் புது­மு­கம்  ஹிம பிந்து.  ‘இத­யத்தை திரு­டாதே’யில் (கலர்ஸ் தமிழ்)  ஹீரோ­யின் சஹா­னா­வாக  நடிப்­பில் வெளுத்து வாங்­கு­ப­வர்  அவர்­தான்.

கலர்ஸ் தமிழ் அலு­வ­ல­கத்­தில் அவரை சந்­தி­தோம்.

*  நீங்க ஒரு புது­மு­கம். ஆனா, உங்க நடிப்­பிலே அது தெரி­ய­லையே, எப்­படி?

எனக்கு ஆக்­டிங் புதுசு.  நான் நடிக்­கிற முதல் சீரி­யல் இந்த  ‘இத­யத்தை திரு­டா­தே’­­­தான்.  ஆக்­டிங்­குல லிட்­டில் பிட்­தான் தெரி­யும்.  டைரக்­டர் சார் எனக்கு எவ்­வ­ளவு அழகா சொல்லி கொடுக்­க­ணுமோ, அவ்­வ­ளவு அழகா சொல்லி கொடுத்து ரொம்ப ஹெல்ப் பண்­றாரு. அது மட்­டு­மில்லே,  மொத்த டீமே எனக்கு பயங்­க­ரமா சப்­போர்ட் பண்­ணுது. சக ஆர்­டிஸ்­டு­கள் எல்­லா­ருமே நடிப்­பிலே ரொம்ப அனு­ப­வ­சா­லி­கள். நான் மட்­டும்­தான் புதுசு. அப்­படி இருந்­தும் எல்­லா­ருமே ரொம்ப ஈக்­கு­வலா என்னை டிரீட் பண்­றாங்க. ரொம்ப நல்லா என்னை பார்த்­துக்­கி­றாங்க. அது மட்­டு­மல்­லாம, இப்­படி ஆக்ட் பண்ணு, அப்­படி ஆக்ட் பண்­ணுன்னு எல்­லா­ருமே எனக்கு சொல்லி கொடுக்­க­வும் செய்­றாங்க. ஸோ, இதெல்­லாம்­தான் என் நடிப்பு நல்லா இருக்­கி­ற­துக்­கான கார­ணங்­கள். நான் நடிக்­கிற கேரக்­டர் என் ஒரி­ஜி­னல் கேரக்­டரா இருக்­கி­ற­தால, எனக்கு ரொம்ப கம்­பர்ட்­ட­பிளா இருக்கு.  

   இதுக்கு முன்­னாடி சின்ன தமிழ் வெப் சீரிஸ் என்னை தேடி வந்­துச்சு.  அது வெறும்  அஞ்சு  நாள் ஷூட்­டிங்­கு­தான். அதி­லே­தான் நடிப்பை கொஞ்­சம் கத்­துக்­கிட்­டேன். இன்­னும் அதை கம்ப்­ளீட் பண்­ணலே. அதிலே கூட எனக்கு பெர்­பெ­க்க்ஷன் இல்லே. நானா­கவே பண்­ணி­ன­து­தான். இந்த சீரி­யல்­ல­தான் ரொம்ப பிடிச்சு பண்­றேன்.

*  சீரி­யல் வாய்ப்பு எப்­படி வந்­துச்சு?

நான் அண்ணா ஆதர்ஷ் காலே­ஜிலே பி.காம்., கடைசி வரு­ஷம் படிச்­சுக்­கிட்டு இருக்­கும்­போதே இதிலே நடிக்க கூப்­பிட்­டி­ருந்­தாங்க. இந்த சீரி­ய­லுக்கு முன்­னா­டியே நிறைய சினிமா வாய்ப்­பு­கள் வந்­துச்சு. அந்த சம­யத்­திலே அப்பா, அம்மா ரெண்டு பேருமே நான் படிக்­க­ணும், படிக்­க­ணும்­னு­தான் சொல்­லிக்­கிட்டு இருந்­தாங்க. நடிக்­கி­ற­துக்கு என்னை அவங்க சப்­போர்ட் பண்­ணவே இல்லே. அத­னால, படிப்­பிலே மட்­டும் கவ­னம் செலுத்­தி­னேன்.  இப்போ அவங்க ஆசைப்­பட்ட மாதி­ரியே  வெற்­றி­க­ரமா படிப்­பெல்­லாம் முடிச்­சிட்­டேன். அதுக்­கப்­பு­றம் மறு­ப­டி­யும் ‘இத­யத்தை திரு­டாதே’ சீரி­ய­லுக்­காக புரொ­டி­யூ­சர் மேம் என்னை அப்­ரோச் பண்ணி, நீங்­க­தான் நடிக்­க­ணும், நல்ல சான்ஸ் மிஸ் பண்­ணி­டா­தீங்­கன்னு என்னை ரொம்ப சப்­போர்ட் பண்­ணாங்க. என்­னை­யும் என் அம்­மா­வை­யும் அவங்­க­ளுக்கு ரொம்ப பிடிக்­கும். எங்­களை நல்லா புரிஞ்­சுக்­கிட்டு  இந்த வாய்ப்பை கொடுத்­தாங்க. இந்த சீரி­யல்­ல­தான் நான் ரொம்ப கத்­துக்­கிட்­டேன்.

*  ‘சஹானா’ கேரக்­டர்ல  உங்­களை கவர்ந்த விஷ­யம் எது?

என் கேரக்­டர் அப்­ப­டியே ‘சஹானா’ கேரக்­டர்ல இருக்­குங்­கிற விஷ­யம் ரொம்ப அட்­ராக்ட் பண்­ணுச்சு.  அந்த கேரக்­டர்  ரொம்ப போல்டா இருக்­கும். அதே சம­யத்­திலே, மத்­த­வங்­க­ளுக்கு ஏதா­வது உதவி செய்ற அள­வுக்கு ரொம்ப அன்­பான கேரக்­ட­ரும் கூட!  நானும் அப்­ப­டித்­தான்.  அப்­பு­றம், அந்த கேரக்­டரை போலவே எனக்­கும் சமை­யல் சுத்­தமா தெரி­யாது, அம்­மா­கிட்ட திட்டு வாங்­கிக்­கிட்டு இருப்­பேன்.

*  எந்த சீன்ல நடிக்­கும்­போது கஷ்­டமா இருந்­துச்சு?

எமோ­ஷ­னல் சீன்ஸ்ல!  முதல்ல எனக்கு அந்த அள­வுக்கு எமோ­ஷன்ஸ் வரலே! அதுக்­கப்­பு­றம், எப்­படி நடிச்சா  நல்லா இருக்­கும்னு நல்லா யோசிச்சு ஆட்­ட­மேட்­டிக்கா அதை கொண்டு வர முடி­யும்னு சின்ன சின்ன டிப்ஸ் மூலமா கத்­துக்­கிட்­டேன்.

* பீட்­பேக்  எப்­படி இருக்கு?

இப்­போ­தான் ஆரம்­ப­மாச்சு சீரி­யல்.  சில பேருக்கு  என்னை அடை­யா­ளம் தெரி­யுது. “உங்­களை ஒரு சீரி­யல்ல பார்த்த மாதிரி இருக்கே?”ன்னு  கேட்­டி­ருக்­காங்க.  சில பேர் என்னை உத்து பார்த்­துக்­கிட்டு இருப்­பாங்க.

* உங்­களை பத்தி …………

என்­னோட நேட்­டிவ் பிளேஸ், ஆந்­திரா. விஜ­ய­வாடா பக்­கத்­திலே இருக்­கிற பீம­வ­ரம் டவுன் எனக்கு பூர்­வீ­கம். அங்­கே­தான் நான் பிறந்­தேன்.  அப்பா கோவிந்த் தமிழ் சினிமா பீல்­டுல  இருக்­காரு. அம்மா மாதுரி, ஹவுஸ்­ஒய்ப். அவங்­க­ளுக்கு  நான் ஒரே வாரிசு.  என் தாத்தா, பாட்டி ரெண்டு பேருமே சினிமா ஆர்­டிஸ்­டு­கள்­தான். பல படங்­கள்ல அவங்க கண­வன் – மனை­வியா நடிச்­சி­ருக்­காங்க. அம்­மா­வோட கசின் கூட ஒரு சினிமா புரொ­டக்­க்ஷன் மேனே­ஜர்­தான்.  நான் பத்­தா­வது வரை ஆந்­தி­ரா­விலே இருக்­கிற லிட்­டில் ஏஞ்­சல்ஸ் பப்­ளிக்  ஸ்கூல்ல  படிச்­சேன். அப்­பு­றம்  பிளஸ் 2 வரை சென்­னை­யிலே இருக்­கிற சரஸ்­வதி வித்­யா­ல­யா­விலே படிச்­சேன்.  அடுத்­ததா, அண்ணா ஆதர்ஷ் காலே­ஜிலே பி.காம். படிச்­சேன்.  அதை முடிச்­சிட்டு  ஸ்மார்ட் ஸ்கில்ஸ்  இன்ஸ்­டி­டி­யூட்ல  பேஷன் டிசை­னிங் முடிச்­சேன்.  சின்ன வய­சி­லேயே ஆக்­டிங் மேலே  இண்ட்­ரஸ்ட் இருந்­துச்சு. அப்­பு­றம், டான்­சி­லே­யும் இண்ட்­ரஸ்ட் இருந்­துச்சு. ஸ்கூல் பங்­ஷன்ஸ்ல டான்ஸ் ஆடி­யி­ருக்­கேன்.  

*  உங்க பேவ­ரிட்  ஸ்டார்ஸ்?

நிறைய பேர் இருக்­காங்க. ரொம்ப பேவ­ரிட் ஸ்டார், விஜய் சார்.  சின்ன வய­சிலே என்­னை­யும், அம்­மா­வை­யும் சினிமா ஷூட்­டிங்­குக்கு அப்பா கூட்­டிட்டு போவாரு. அப்­படி விஜய் சார் நடிக்­கிற  ஒரு படத்­தோட ஷூட்­டிங்­குக்கு போயி­ருந்த போது என் கூட அவர் நல்லா விளை­யா­டி­னாரு. அதே மாதிரி ‘படை­யப்பா’ படத்­திலே வர்ற ‘சிங்க நடை போட்டு சிக­ரத்­தில் ஏறு…’ பாட்டு சீன்ல  விஜய் சார் முகம் மாறி  ஒரு  பாப்பா முகம் வருமே, அது நான்­தான்.

– ம.  வான­மு­தன்Trending Now: