விஜய் டிவியில் ‘பாக்கியலட்சுமி!’

17-03-2020 12:45 PM

விஜய் டிவி­யில் ‘பாக்­கி­ய­லட்­சுமி’ புதிய சீரி­யல் திங்­கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.

பாக்­ய­லட்­சுமி ஒரு ஹவுஸ்­ஒய்ப்.  அவள் கண­வர் கோபி­நாத். செழி­யன், எழி­லன், இனியா ஆகி­யோர் அவர்­க­ளின் வாரி­சு­கள்.  அவர்­க­ளு­டை­யது கூட்டு குடும்­பம், மாம­னார், மாமி­யார் மைத்­து­னர்­கள் என அனை­வ­ரும் ஒன்­றாக வசிக்­கி­றார்­கள். குடும்­பத்­தில் உள்ள அனை­வ­ருக்­கும் என்­னென்ன  தேவை, அவர்­கள் விரும்­பு­வது என்ன, விரும்­பா­தது என்ன என்­பதை கவ­னித்­துக்­கொள்­வ­து­தான் பாக்­ய­லட்­சு­மி­யின் அன்­றாட வேலை.  துர­திர்ஷ்­ட­வ­ச­மாக யாரும் அவ­ளைக் கவ­னிப்­ப­தில்லை அல்­லது அவ­ளு­டைய அன்­பை­யும் பாசத்­தை­யும் ஒரு­போ­தும் பொருட்­டாக மதிப்­ப­தில்லை. அவள் சமை­ய­லில் சிறந்­த­வள்.  கிரா­மத்­தில் பிறந்து வளர்ந்­த­வள், ஆங்­கி­லம் தவிர பல மொழி­க­ளில் சர­ள­மா­கப் பேசு­வாள்.  (ஆங்­கி­லம் பேசா­தது அவ­ளு­டைய வீட்­டில் தாழ்ந்­த­தா­கக் கரு­தப்­ப­டு­கி­றது!). அவ­ளது குடும்­பம் மிக­வும் சம­கா­லத்­த­வர் மற்­றும் உயர் வகுப்பு நண்­பர்­க­ளு­டன் பழ­கக்­கூ­டி­யது.  

ஆனால், இந்த விஷ­யங்­கள் எது­வும் அவளை ஒரு­போ­தும் பாதித்­த­தில்லை.  

அவ­ளது வாழ்க்­கையை புரட்­டிப்­போ­டும் ஒரு விஷ­யத்தை அவள் எதிர்­கொள்­கி­றாள். அது அவ­ளுக்கு மிகுந்த வேத­னையை அளிக்­கி­றது. அத­னால் அவள் ஒரு முடிவை எடுக்­கி­றாள்.  அவளை உலுக்­கிய அந்த ஒரு விஷ­யம் என்ன? அவள் எப்­படி வேறு­பட்ட ஆளு­மை­யாக மாறு­கி­றாள்?

பாக்­கி­ய­லட்­சு­மி­யாக சுசித்­ரா­வும், அவ­ளது கண­வ­னாக சதீ­ஷும், அவர்­க­ளது வாரி­சு­க­ளாக வேலு, விஷால், நேஹா ஆகி­யோ­ரும் நடிக்­கி­றார்­கள். இவர்­க­ளு­டன் ராஜ­லட்­சுமி, வீணா, ரொசா­ரியோ, ஸ்ரீத்து மற்­றும் ஏரா­ள­மா­னோர் நடிக்­கின்­ற­னர்.

‘பாண்­டி­யன் ஸ்டோர்ஸ்’ டைரக்­டர் சிவ­சே­கர் டைரக்ட் செய்­கி­றார்.Trending Now: