கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 222

16-03-2020 05:18 PM

ஜெய்சங்கருக்கு ஜெயம் கொடுத்த குரல் – 1

அறு­ப­து­க­ளில் டி.எம்.சவுந்­த­ர­ரா­ஜன்­தான் நட்­சத்­தி­ரப் பின்­ன­ணிப் பாட­கர். ஆனால் அந்த இடத்­திற்கு அவர் லேசில் வந்­து­வி­ட­வில்லை. ஐம்­ப­து­க­ளில், பின்­ன­ணிப் பாட­கர்­கள் மத்­தி­யில் பல­மான போட்­டி­யி­ருந்­தது! சி.எஸ்.ஜெய­ரா­மன், கண்­ட­சாலா, ஏ.எம்.ராஜா, திருச்சி லோக­நா­தன், சீர்­காழி கோவிந்­த­ரா­ஜன், பி.பி.ஸ்ரீநி­வாஸ் என்று பல பின்­ன­ணிப் பாட­கர்­க­ளு­டன் டி.எம்.எஸ். பங்கு பெற்ற ஓட்­டம் அது. அதில் டி.எம்.எஸ்.தான் வென்­றார்.

ஏனென்­றால், அறு­ப­து­க­ளில் வந்த இசை அலை­யில் திரும்­பிப் பார்த்­தால், டி.எம்.எஸ். மட்­டும்­தான் வெற்றி இலக்­கில் இருந்­தார். காலம் நடத்­திக்­காட்­டு­கிற  பந்­த­யங்­க­ளில் இது­வும் ஒன்று.  திடீ­ரென்று ஆட்­டத்­தின் முடிவு இந்த இலக்­குக்­குக் கொண்­டு­வந்­து­விட்­டு­விட்­டது. பின்­னுக்­குத் தள்­ளப்­பட்­ட­வர்­க­ளுக்­குத் தகு­தி­யில்­லையா என்று கேட்­டால், நிச்­ச­ய­மாக அப்­ப­டிக் கூறவே முடி­யாது. அவர்­கள் தகுதி மிகு­தி­யா­கப் படைத்­த­வர்­கள்!

 ‘‘வாய்யா ஹீரோ,’’ என்று டி.எம்.எஸ்சை 1950ல் அறி­மு­கப்­ப­டுத்­திய  எஸ்.எம்.சுப்­பையா நாயுடு வழக்­க­மாக அழைத்­த­தற்கு ஏற்ப, சிவாஜி, எம்.ஜி.ஆர். ஆகிய தமிழ் சினி­மா­வின் இரு துரு­வங்­க­ளுக்கு வெற்­றி­க­ர­மா­கப் பாடக்­கூ­டிய ஒரே பாட­க­ராக அவர் இருந்­தார். ஜெமினி கணே­ச­னுக்கு ஏ.எம்.ராஜா, அதன் பிறகு பி.பி.எஸ். என்ற நிலை­யை­யும் மீறி, சில சம­யம் ஜெமி­னிக்­கும் டி.எம்.எஸ். குரல் கொடுத்­தார்! தமிழ் சினி­மா­வில் முதல் தேர்­வுக்­கு­ரிய ஆண் பின்­ன­ணிப் பாட­கர் என்ற நிலையை அவர் அடைந்­து­விட்­டார்.

இந்த நிலை, இசை­ய­மைப்­பா­ளர் டி.ஆர். பாப்­பா­வுக்கு ஒரு பிரச்­னையை ஏற்­ப­டுத்­தி­யது! எம்.ஜி.ஆர், ஜமுனா, கண்­ணாம்பா நடித்து, 1959ல் வெளி­வந்த ‘தாய் மக­ளுக்கு கட்­டிய தாலி’ என்ற படத்­திற்கு அவர் இசை­ய­மைத்­துக் கொண்­டி­ருந்­த­போது ஒரு சம்­ப­வம் நடந்­தி­ருந்­தது. அதன் பின்­வி­ளை­வு­கள் அவரை அறு­ப­து­க­ளில் நடுப்­ப­கு­தி­யில் பய­மு­றுத்­திக்­கொண்­டி­ருந்­தன!

நித்­ய­கலா என்­றொரு பாடகி. அவரை ‘தாய் மக­ளுக்கு கட்­டிய தாலி’  படத்­தில், டி.எம்.எஸ்­சு­டன் பாட­வைத்­து­வி­ட­வேண்­டும் என்ற உறு­தி­யு­டன் பாப்பா பாடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­தார்! அது பல டேக்­கு­களை வாங்­கிக் கொண்­டி­ருந்­தது. ஒலிப்­ப­திவு கூடங்­க­ளுக்கு இடை­யில் தொடர்ந்து தாவிக்­கொண்­டி­ருக்­க­வேண்­டிய அவ­சி­ய­மும் அவ­ச­ர­மும் டி.எம்.எஸ்.சுக்கு இருந்­த­தால், பாப்­பா­வின் இசை­ய­மைப்­பில் இந்த  பாட­லில் தொடர்ந்து ஏற்­பட்ட தாம­தம், அவ­ருக்­கும்  பாப்­பா­வுக்­கு­மி­டையே ஒரு வாக்­கு­வா­தத்தை ஏற்­ப­டுத்­தி­யது. ஒரு­வ­ரை­யொ­ரு­வர் சொல்­லம்­பு­க­ளால் காயப்­ப­டுத்­திய சம்­ப­வம் நடந்­தது.

அந்த அத்­தி­யா­யம் எப்­ப­டியோ நிறை­வுக்­குக் கொண்டு வரப்­பட்­டா­லும், அதன் பிறகு பாப்­பா­வின் இசை­யில் டி.எம்.எஸ். பாட­வில்லை. ஏனென்­றால் பாப்பா அவரை மீண்­டும் அழைக்­க­வில்லை!

உதா­ர­ணத்­திற்கு,  ‘நல்­ல­வன் வாழ்­வான்’ என்ற படத்­தில் எம்.ஜி.ஆருக்கு ‘ஆண்­ட­வன் ஒரு­வன் இருக்­கின்­றான்’ என்று  சீர்­காழி கோவிந்­த­ரா­ஜனை பாட வைத்­தார் பாப்பா. மிக­வும் சிறப்­பா­கத்­தான் இருந்­தது. ‘விஜ­ய­புரி வீரன்’ என்று படத்­தின் புதிய நாய­கன் ஆனந்­தனை, ஏ.எம்.ராஜா­வின் குர­லில், ‘உள்­ளத்­திலே உரம் வேணு­மடா’ என்று எழுச்­சிப் பாடல் பாட வைத்­தார் பாப்பா! கலை­ஞ­ரின் ‘குற­வஞ்­சி’­யில், சிவா­ஜிக்­

கான எல்லா பாடல்­க­ளை­யும் சிதம்­ப­ரம் ஜெய­ரா­ம­னைப் பாட வைத்­தார்.

ஆக, பாப்­பா­வின் இசை தொடுப்­பில் டி.எம்.எஸ். ஒரு நான்­கைந்து வரு­டங்­கள் இடம்­பெ­ற­வில்லை!  ஆனால் டி.எம்.எஸ்­சுக்கு இதில் பாதிப்­பில்லை...ஏனென்­றால் விஸ்­வ­நா­தன் – ராம­முர்த்தி, கே.வி.மகா­தே­வன் என்ற இரண்டு நட்­சத்­திர இசை­ய­மைப்­பா­ளர்­க­ளுக்கு அவர்­தான் முக்­கி­யப் பாட­கர்! அங்­கொன்­றும் இங்­கொன்­று­மாக  பாப்பா இசை­ய­மைத்த படங்­க­ளில் தனக்கு வாய்ப்பு அளிக்­கப்­ப­ட­வில்லை என்­பதை டி.எம்.எஸ். கவ­னிக்­கவே இல்லை!

இந்த  கால­கட்­டத்­தில், இசை­ய­மைப்­பா­ளர் ஜி.ராம­நா­தன் தானே இசை அமைத்து,  சவுந்­த­ர­ரா­ஜ­னைப் பட்­டி­னத்­தா­ராக நடிக்க வைத்­துத் தயா­ரித்த  ‘பட்­டி­னத்­தார்’ நல்ல  வர­வேற்­பைப் பெற்­றது. இதை தொடர்ந்து, தயா­ரிப்­பா­ளர் டி.ஆர்.ராமண்ணா, ராம­நா­த­னின் இசை அமைப்­பில் சவுந்­த­ர­ரா­ஜனை வைத்து ‘அரு­ண­கி­ரி­நா­தர்’ எடுத்­தார். இசை­ய­மைப்­பின் இடை­யிலே ராம­நா­தன் கால­மா­கி­விட்ட கார­ணத்­தால், டி.ஆர். பாப்­பாவை இசை­ய­மைப்­பில் ஈடு­ப­டுத்­தி­னார் ராமண்ணா.

ஆனால், டி.எம்.எஸ்சை டி.ஆர்.பாப்பா நாடியே தீர­வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட, இதை­வி­டப் பெரிய சூழ்­நிலை ஒன்று ஏற்­பட்­டது.

சிட்­டா­டல் பிலிம் கார்ப்­ப­ரே­ஷன் என்ற தயா­ரிப்பு நிறு­வ­னத்­தை­யும் சிட்­டா­டல் ஸ்டூடி­யோ­வை­யும் நடத்­திக்­கொண்­டி­ருந்த ஜோசப் தளி­யத்­தின் நட்­சத்­திர இசை­ய­மைப்­பா­ள­ராக டி.ஆர்.பாப்பா விளங்­கி­னார்.

சிறிய பட்­ஜெட்­டில் புது நடி­கர்­க­ளைக்­கொண்டு படம் எடுத்து வெற்றி அடை­வ­தில் வல்­ல­வர் தளி­யத். ஒரு படத்­திற்கு அவர் பாப்­பா­வுக்கு பதி­னைந்­தா­யி­ரம் ரூபாய் கொடுப்­பார். படத்­தின் நாய­கன் உட்­பட யாருக்­கும் கொடுக்­கும் சம்­ப­ளத்­தில் அது­தான் அதி­கப்­ப­டி­யான தொகை! ஆனால், 1964ல் அவர் இப்­படி ஒரு படம் எடுக்க நினைத்­த­போது, தன்­னு­டைய அபி­மா­னத்­திற்­கு­ரிய பாப்­பா­வி­டம் ஒரு விஷ­யத்தை அவர் தெளி­வு­ப­டுத்­தி­விட்­டார்: ‘‘நான் எடுக்­கப்­போ­கிற அடுத்த படத்­தில், ஹீரோ­வுக்கு டி.எம்.எஸ்.தான் பாட­வேண்­டும்!’’

என்ன செய்­வார் டி.ஆர்.பாப்பா?! ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன் நடந்த மோதல் நினை­வுக்கு வந்­தது! தன்­னு­டைய படங்­க­ளில் டி.எம்.எஸ்சை பொது­வாக விலக்­கியே வைத்த நிலை நினை­வுக்கு வந்­தது! ஆனா­லும், தன்­னு­டைய சுய அபி­மா­னத்தை அடக்­கிக்­கொண்டு டி.எம்.எஸ்ûஸ நாடி­னார்!

பாப்­பா­வின் அழைப்­பிற்­குப் பதில் கூறும் வகை­யில், ‘‘நான் வந்து பாட­றேன்... முன்னே நடந்­த­தெல்­லாம் என்­னைக்கோ மறந்­துட்­டேன்,’’ என்­றார் டி.எம்.எஸ்.!

தினம் தினம் புதுப்­பு­துப்­பா­டல்­க­ ளைத் தொடர்ந்து பாடிக்­கொண்­டி­ருந்த டி.எம்.எஸ்­சுக்கு, ‘தாய் மக­ளுக்­குக் கட்­டிய தாலி’ ஒரு மாமாங்­கத்­திற்கு  முன்னே நடந்த சம்­ப­வ­மா­கத் தோன்­றி­யது. அதைத்­த­விர, பழைய கசப்­பு­களை ஊதி வளர்த்­துக்­கொண்­டி­ருக்­கும் தன்மை அவ­ரி­டம் இல்லை.

இதை டி.ஆர்.பாப்­பா­வின் இசை­யில் அவர் பின்­னர் பாடிய பாடல் ஒன்­றின் பல்­லவி எடுத்­துக்­காட்­டி­யது.

‘‘இங்கே இருப்­பது சில காலம்

இதற்­குள் ஏனோ அகம்­பா­வம்

இத­னால் உண்டோ ஒரு லாபம், இதை எண்­ணிப்­பாரு தெளி­வா­கும்’’ என்று பாப்பா இசை­ய­மைத்த ‘விளக்­கேற்­றி­ய­வள்’ படத்­தில், ஆலங்­குடி சோமு­வின் வரி­களை டி.எம்.எஸ். பாடி­னார்.

இந்த வகை­யில் டி.ஆர்.பாப்­பா­வும், சவுந்­த­ர­ரா­ஜ­னும் மீண்­டும் இணைந்­தது, சிவா­ஜி­யும், எம்.ஜி.ஆரும் தனிக்­காட்டு சக்­ர­வர்த்­தி­க­ளாக கோலோச்­சிக் கொண்­டி­ருந்த காலத்­தில், ஒரு ஜெய்­சங்­கர் தலை­யெ­டுப்­ப­தற்கு வழி­வ­குத்­தது.  

திரு­நெல்­வே­லி­யில் பிறந்த சங்­க­ர­நா­ரா­ய­ணன், சென்­னை­யில் மயிலை பி.எஸ். உயர்­நி­லைப்­பள்­ளி­யில் படித்­து­விட்டு விவே­கா­னந்தா கல்­லூ­ரி­யில் பி.ஏ. முடித்­தார். கல்­லூ­ரி­யில் படிக்­கும்­போது, அமெச்­சூர் நாட­கக்­கு­ழுக்­க­ளின் நாட­கங்­க­ளில் நடிக்­கும் அனு­ப­வம் கிடைத்­தது. நீதி­ப­தி­யான தந்­தை­யின் உந்­து­த­லால் சட்­டக்­கல்­லூ­ரி­யில் சேர்ந்­தா­லும், ஒரு வரு­டத்­திற்கு மேல் சட்­டம் பயில முடி­ய­வில்லை! தில்­லி­யில் வேலை கிடைத்து அங்கு போனால், அங்கு நாடக வாய்ப்­பு­களே இல்லை! நடிப்பு இல்லை என்­றால் சங்­க­ருக்கு என்­னமோ போல் இருந்­தது. வேலையை விட்­டு­விட்டு மீண்­டும் சென்னை வந்­தார்.

இந்த நிலை­யில், இசை­ய­மைப்­பா­ளர் டி.ஆர். பாப்பா, தன்­னு­டைய நெடு­நா­ளைய நண்­ப­ரும் முத­லா­ளி­யு­மான

சிட்­டா­டல் அதி­பர் ஜோசப் தளி­யத்­தி­டம் சங்­கரை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். தளி­யத்­திற்கு சங்­கரை மிக­வும் பிடித்­து­விட்­டது.

‘‘புது­மு­கங்­க­ளி­டம் நாம் விரும்­பும்­படி  வேலை வாங்­க­லாம். புதிய நடி­கர்­க­ளைக் கொண்டு திரைப்­ப­டம் எடுத்­தால் விநி­யோ­கஸ்­தர்­கள் வாங்­கு­வ­தில்லை என்று கூற­மு­டி­யாது. போட்­டி­யின்­றித் திரை­யிட்­டால் வெற்றி பெற­லாம்.  பலரை முன்­னுக்­குக் கொண்டு வரு­கி­றோம் என்ற திருப்­தி­யும் இருக்­கி­றது’’ என்று எண்­ணி­யி­ருந்த தளி­யத், தன்­னு­டைய படத்­தின் நாய­க­னாக சங்­கரை ஆக்­கி­வி­ட­வேண்­டும் என்று முடிவு செய்­தார். சங்­கரை ‘ஜெய்­சங்­கர்’ என்று பெயர் மாற்றி, முதல் படத்­தி­லேயே இரு மாறு­பட்ட தோற்­றங்­க­ளு­டன் நடிக்க வைத்­தார்.

கதா­நா­ய­கன் மாறு­ வே­டத்­தில் தோன்றி சில மர்­மங்­க­ளைத் துப்­ப­றி­வ­தாக ‘இர­வும் பக­லும்’ கதை செல்­கி­றது. சுருட்டை முடி டோப்பா, கறுப்பு லெதர் ஜாக்­கெட், முகத்­தில் பெரிய மச்­சம் என்ற மாறு­வேட ஜெய்­சங்­கர் வித்­தி­யா­ச­மாக இருந்­தார்.

தளி­யத் சங்­க­ருக்கு சூட்­டிய ‘ஜெய்’ என்ற அடை­மொழி,  அர்த்­த­முள்­ள­தாக ஆயிற்று. ‘இர­வும் பக­லும்’  ஜெயத்­தைப் பெற்­றது. அதற்கு உறு­து­ணை­யாக இருந்­தது சவுந்­த­ர­ரா­ஜ­னின் குரல். புது­மு­கத்­திற்­குப் பக்­கு­வ­மான, கம்­பீ­ர­மான, சிவாஜி, எம்.ஜி.ஆர். முத­லிய நட்­சத்­தி­ரங்­க­ளு­டன் இணைத்­துப் பார்க்­கப்­பட்ட பின்­ன­ணிக் குரல் அமைய வேண்­டும் என்­று­தான் தளி­யத்­தும், பாப்­பா­வும் ஜெய்­சங்­க­ருக்கு சவுந்­த­ர­ரா­ஜ­னைப் பாட வைத்­தார்­கள். படத்­தில் ஆண்­மை­யும் தன்­னம்­பிக்­கை­யும் நிறைந்த ஜெய்­சங்­க­ரின் தோர­ணைக்கு, சவுந்­த­ர­ரா­ஜ­னின் குரல் அற்­பு­த­மா­கப் பொருந்­தி­யது. படத்­தின் டைட்­டில் சொற்­கள் அமைந்­தி­ருக்­கிற பாடல்,

 ‘இரவு வரும் பக­லும் வரும்

உல­கம் ஒன்­று­தான்’ என்­பது.  

கதா­நா­யக நடி­கர்­கள் படத்­தில் ஒரு தத்­து­வப்­பா­டல் பாடு­வது ஒரு சம்­பி­ர­தா­ய­மா­கக் கூட இருந்த கால­கட்­டத்­தில், அறி­முக கதா­நா­யக நடி­க­ருக்கு தத்­துவ செறி­வுள்ள வரி­கள் கொண்ட பாடலை வைப்­ப­தற்கு ஒரு தைரி­யம் வேண்­டும். அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நபரே ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வார் என்று கூற­மு­டி­யாத நிலை­யில்,   அவர் வாயி­லாக வேதாந்­தங்­களை வெளி­யி­டு­வது ஆபத்­தான வேலை­தான், அபத்­த­மாக முடி­யக்­கூ­டிய சங்­கதி அது. ஆனால் பாட­லும் நன்­றாக இருந்து, பட­மாக்­கப்­பட்ட வித­மும் சிறப்­பாக அமைந்­த­தால், எல்­லாம் நல­மாக முடிந்­தது.

தளி­யத் தயா­ரிக்­கும் படம் என்­றாலே கூடு­தல் நாட்­டம் காட்­டக்­கூ­டி­ய­வர்  டி.ஆர். பாப்பா.  ‘இர­வும் பக­லும்’ படத்­தைப் பொறுத்­த­வரை, அதன் கதா­நா­யக நடி­கரே அவ­ரு­டைய சிபா­ரி­சின் பேரில்­தான் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார் என்­கி­ற­போது,

இன்­னும் ஜாக்­கி­ர­தை­யாக தன்­னு­டைய இசை­ய­மைப்பை செய்­தார். முக்­கி­யப்­பா­ட­க­ரான டி.எம்.எஸ்­சும் அவ­ரு­டன் சில வரு­டங்­க­ளுக்­குப் பிறகு இணைந்­தி­ருந்­தார். இத­னால்  பாடல்­கள் அனைத்­தும் கவர்ந்­தி­ழுக்­கும் மெல­டி­க­ளாக அமைந்­தன.

 ‘இரவு வரும் பக­லும் வரும்’ பாடலை எடுத்­துக்­கொண்­டால் கூட, அதன் தொடக்­கமே,  கேட்­ப­தற்கு

ரம்­மி­ய­மா­க­வும் ஆழ­மான கருத்­துக்­களை வெளி­யி­டு­வ­தற்­கான இனி­மை­யான சூழலை  ஏற்­ப­டுத்­து­கிற வண்­ண­மும் அமைந்­தது.

உலக வாழ்க்­கை­யில் விளை­வு­கள் இரண்­டாக இருந்­தா­லும், எல்­லாம் ஒன்­று­தான், ஒன்­று­தான் என்று அரு­மை­யா­கச் செல்­கின்­றன வரி­கள். ‘கதி­ரும் மதி­யும் வந்­து­போ­னா­லும் வானம் ஒன்­று­தான், ஒளி­யும் இரு­ளும் வந்­து­போ­னா­லும் உல­கம் ஒன்­று­தான், வள­மை­யும் வறு­மை­யும் வந்­து­போ­னா­லும் வாழ்க்கை ஒன்­று­தான், இன்­ப­மும் துன்­ப­மும் வந்­து­போ­னா­லும் இத­யம் ஒன்­று­தான்’ என்ற பாடல் கூறு­கிற விஷ­யம் மட்­டும் புரிந்­து­போ­னால், அள­வுக்கு மீறிய சோகத்­து­டன் இத­யம் நொந்­து­போ­குமா?

ஒரு தேர்­வில் தோல்வி வந்­தது என்­ப­தற்­காக மாண­வன் உயிரை மாய்த்­துக்­கொள்­வானா, தன்­னு­டைய பெற்­றோ­ரின் பாசத்­தை­யும் பரி­வை­யும் புரிந்­து­ கொள்­ளா­மல் கொல்­வானா? குவிந்த செல்­வங்­கள் சிதைந்து பறந்­து­விட்­டன என்­ப­தைத் தாங்க முடி­யா­மல் முன்­னணி தொழி­ல­தி­பர்­கள் தங்­க­ளையே மாய்த்­துக்­கொள்­வ­தைப் பார்க்­கி­றோம்.

இரண்டு இரண்­டாக வரும் வாழ்க்­கை­யின் பக­டைக்­காய்­கள் உரு­ளும்­போது, பள்­ளத்­தாக்கு சிக­ர­மா­கும் சிக­ரம் தக­ர­மா­கும் என்­பதை உணர்ந்­தால், இந்த வேடிக்கை வாழ்­வின் மாறாட்­டங்­க­ளைக் கண்டு உள்­ளம் அஞ்­சுமா?  அடர்த்­தி­யான இத்­தனை எண்­ணங்­க­ளை­யும் வண்­ணங்­க­ளை­யும் பாட்­டுச் சிற­கில் ஏந்தி வரும் ஜெய்­சங்­கர் நடித்த முதல் தத்­து­வப்­பா­டலை, நானும் டி.எம்.எஸ்­சும் சேர்ந்து அவ­ரு­டைய இல்­லத்­தில் ஒரு நாள் கேட்­டுக்­கொண்­டி­ருந்­தோம்....

அப்­போது, ஒரு புது கதா­நா­ய­க­னுக்­கான முதல் வெற்­றிப்­பா­ட­லைக் குறித்து, புன்­ன­கைத்­த­வாறு தான் பாடிய பாட­லைக் குறித்து டி.எம்.எஸ். கூறிய விஷ­யம் சிந்­த­னை­யைத் தூண்­டு­வ­தாக

இருந்­தது.

  (தொட­ரும்)  

Trending Now: