11-03-2020 06:49 PM
![]() | ![]() |
சென்ற வார தொடர்ச்சி...
பள்ளிக்கு அழைத்துச் செல்வது, பையனை பாட்டு கிளாஸ் அனுப்புவது, பெண்ணை டான்ஸ் கிளாசுக்கு அழைச்சுட்டு போவது என்று இதற்கு நடுவில் எனது சாப்ட்வேர் பணிகளை பார்த்துக்கொண்டு இருந்தேன். ஹரீஸ் ஒருநாள் இனி நாம் சென்னைக்கு போகலாம் என்று சிங்கப்பூரில் இருந்து கிளம்பி வந்தார். அப்போதும் எனக்கு மகிழ்ச்சிதான்...
இந்தியாவில் வாழக்கை என்றபின்னர் சொந்த ஊரில் வசிக்காமல் எப்படி. அப்படித்தான் சென்னைக்கு வந்தோம். குழந்தைகளை செட்டிநாடு வித்தியாஸ்ரமம் பள்ளியில் சேர்த்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
அப்போதுதான் நாங்கள் தனியாக சாப்ட்வேர் கம்பபெனி ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து, நானும் ஹரீஷும் ஆரம்பித்தோம். இப்போது எங்கள் கம்பெனியில் 22 பேர் வேலை பார்க்கிறார்கள். இங்கிலாந்து, அமெரிக்காவில் இருந்து எங்களுக்கு புராஜெக்ட் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு இங்கு நாங்கள் வேலை பார்த்து கொடுக்கிறோம்” என்று கூறுகிறார். முக்கியமாக சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு தமிழ் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் விடுமுறை கிடைப்பதில்லை.. இது ஒரு கஷ்டமாக பார்க்கப்படுகிறேதே என்று கேட்டபோது...” உண்மைதான். எங்கள் கம்பெனியில் அப்படி கெடுபிடிகள் இல்லை.விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள்.. கிடைக்கும் நேரத்தில் வேலையையும் முடித்து விடுங்கள் என்று அவர்களுக்கு சுதந்திரம் தருகிறோம். கல்யாணம் என்றால் கூடகல்யாணத்துக்கு முன்னதாக, கல்யாணத்துக்குப் பின்னதாக என்று விடுமுறைகள் தருகிறோம். பெண்கள் என்றால் வீட்டில் இருந்து வேலையை . பாரும்மா. உன் குழந்தைகளை கவனிச்சுக்கிட்டே. இந்த நேரத்தில் லாகின் செய்ய வேண்டும் என்பது எல்லாம் அவசியம் இல்லாதது. அந்த நாளின் வேலையை சரியாக செய்து முடித்துக் கொடுங்கள் என்பதுதான் உங்கள் டார்கெட் என்று சொல்லிவிடுவேன்.
முதலில் வீட்டில் நல்ல அம்மாவாக இருக்க வேண்டும். அடுத்துதான் வேலை என்பது என் நிலைப்பாடு” என்று சொல்கிறார். இந்த சாப்ட்வேர் புரபஷனில் லண்டன் சென்று அங்கிருந்து வேறு இடத்துக்கு செல்ல விசா வாங்கிக்கொண்டு டிரெய்னில் பயணித்து பிளைட்டை பிடிக்க வேண்டுமாம். அப்போது எப்போதாவது பாதியில் நின்று மக்கர் செய்யும் டிரெயின் அன்றைக்குப் பார்த்து பத்தியில் நின்றுவிட, இன்னொரு ஸ்டேஷன் சென்று வேறு ரயிலிப் பிடித்து, ஏர்போர்ட் செல்ல வேண்டும்” அப்போது என்னடா வாழ்க்கை இது..
இப்படி வந்து அல்லல் படுகிறோமே என்று நினைத்தேன். என்னுடன் நடந்து வந்த இங்கிலாந்து லேடி 50 வயது இருக்கும். அவர் சொன்னார்.. இதெல்லாம் நம்ம கையில் இல்லை.. நம்ம கையில் இருப்பதை வேண்டுமானால் நம்மால் சரி செய்ய முடியும். இதை என்ன செய்ய முடியும் என்று கேட்டார். அப்போது சோர்ந்திருந்த நான் உடனடியாக சுறுசுறுப்பு அடைந்து அடுத்த ரயிலைப் பிடித்து ஏர்போர்ட் சென்றேன். எங்கு இருந்தாலும் எது நடந்தாலும் கடவுள் அதன் மூலமாக நமக்கு நன்மையே
செய்கிறார் என்று நினைத்துக் கொள்கிறேன்” என்று கூறினார். இன்னும் என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்று கேட்டால், “ அப்பா பெயரில் சின்ன அளவில் ஒரு டிரஸ்ட் நடத்தறோம். அதில் படிக்க வசதி இல்லாத பிள்ளைகளுக்கு கல்வி உதவி... இது மட்டும் இல்லாமல் நம்ம கல்ச்சரை வரும் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் விதமா தென்னிந்திய அளவில் பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் இரண்டையும் வசதி இல்லாத குழந்தைகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எனது நேரத்தை செலவிடுகிறேன்.
முதலில் கடமையை சரியாக செய்ய வேண்டும்.. அடுத்து எனது நேரத்தை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும்..அடுத்து குடிமகனாக நாட்டுக்கு நமது பங்கை எந்த விதத்தில் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருந்து செயல்பட்டு வருகிறேன்.” என்று கூறும் பானு ஹரீஷ், தனது கணவருக்கு விவசாயம் என்றால் மிகவும் பிடிக்கும். என் மாமனார் அமிர்தம், மாமியார் பாமா இன்னும் விவசாயம் செய்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு முடியாத நிலையில், ஹரீஷ் விவசாயம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கார் என்று அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியாகத் தருகிறார்.
இந்த காலம் இழந்தவற்றை மீட்டெ
டுக்கும் காலமாகவே வளரும் சமுதாயத்தினரால் பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வது, பின்னர் இழந்தவற்றை மீட்டெடுப்பது என்று செயல்ப்பட்டால் பானு ஹரீஷ் போன்று எல்லா பெண்களுக்கும் தொட்டது துலங்கும். எல்லாவற்றிலும் வெற்றியே கிடைக்கும்.