மனதில் கணவர் , நாட்டுக்கு தன்னையே அர்ப்பணம் – லட்சுமி

11-03-2020 06:48 PM

புல்­வாமா தாக்­கு­த­லில் இறந்த மேஜ­ரின் நினை­வாக, அவ­ரு­டைய மனைவி நிகிதா கவுல் தவுண்­டி­யால் கண­வரை பெரு­மைப்­ப­டுத்­தும் வகை­யில் ராணு­வத்­தில் சேர ஆயத்­த­மா­கி­விட்­டார். பிப்­ர­வரி 14. ஒவ்­வொரு ஆண்­டும் அன்­பு­களை பகிர்ந்து கொள்­ளும் கொண்­டாட்ட தின­மாக கடந்து செல்­கை­யில், 2019ம் ஆண்டு வந்த அத்­தி­னம் இந்­தி­யர்­க­ளுக்கு எளி­தில் மறந்­து­விட இய­லாத கருப்­பு­தி­ன­மா­கி­யது.  காஷ்­மீர் மாநி­லம் புல்­வாமா மாவட்­டத்­தில் தீவி­ர­வா­தி­கள் நடத்­திய தற்­கொ­லைப்­படை தாக்­கு­த­லில், இந்­திய சி.ஆர்.பி.எப் வீரர்­கள் 44 பேர் வீர­ம­ர­ணம் அடைந்­த­னர். இந்­தி­யா­வில் நிகழ்ந்த மிகப்­பெ­ரும் தாக்­கு­தல்­க­ளுள் ஒன்­றாக கரு­தப்­பட்ட புல்­வாமா தாக்­கு­த­லுக்கு, பதி­ல­டி­யாக தீவி­ர­வா­தி­க­ ளுக்­கும் இந்­திய ராணு­வத்­திற்­கும் இடையே நடந்த துப்­பாக்கி சண்­டை­யில் மேஜர் விபூடி சங்­கர் தவுண்­டி­யால் உட்­பட 4 வீரர்­கள் வீர­ம­ர­ண­ ம­டைந்­த­னர். மேஜர் இறந்து ஒரு ஆண்­டு­கள் நிறை­வ­டைந்த நிலை­யில், அவ­ரு­டைய மனைவி நிகிதா கவுல் தவுண்­டி­யால் கண­வரை பெரு­மைப்­ப­டுத்­தும் வகை­யில் ராணு­வத்­தில் சேர ஆயத்­த­மா­கி­விட்­டார். ராணு­வத் தேர்வு மற்­றும் நேர்­கா­ணலை முடித்த அவர், சென்னை ராணு­வப் பயிற்சி அகா­ட­மி­யில் ப யிற்­சி­யில் சேர காத்­துள்­ளார்.

கடந்­தாண்டு துப்­பாக்­கிச் சண்­டை­யில் இறந்த மேஜர் விபூ­டி­யின் இறுதி அஞ்­ச­லி­யில் அவ­ரது மனைவி நிகிதா கவுல் பேசிய வார்த்­தை­க­ளும் அவ­ரது செய்­கை­க­ளும் அடங்­கிய வீடியோ வெளி­யாகி மொத்த இந்­திய மக்­க­ளை­யும் கலங்­கச் செய்­தது. இறு­திச் சடங்­கில் கண­வ­ரது உட­லுக்கு அரு­கிலே கனத்த மன­து­டன் வெகு­நே­ரம் கண­வரை வெறித்து நோக்­கி­ய­படி நின்ற நிகிதா, கண­வ­ருக்கு முத்­தம் கொடுத்து ‘லவ் யூ’ என்று தளர்ந்த குர­லில் கூறிய காட்­சி­க­ளும், மனதை உடைக்­கும் புகைப்­ப­டங்­க­ ளும் ஊட­கங்­க­ளில் வெளி­வந்து முழு நாட்­டை­யும் உணர்ச்­சி­வ­சப்­ப­டுத்­தின.  உத்­ர­காண்ட் மாநி­லம் டோரா­டூனை சேர்ந்த மேஜர் விபூ­டிக்­கும், நிகி­தா­ வுக்­கும் கடந்த 2018ம் ஆண்டு ஏப்­ரல் மாதம் திரு­ம­ணம் நடை­பெற்­றுள்­ளது. திரு­ம­ணம் முடிந்து முத­லா­ மாண்டு தினத்தை கொண்­டா­டு­வ­தற்கு இரு மாதங்­களே இருந்த நிலை­யில் மேஜர் நாட்­டுக்­காக உயிர் தியா­கம் செய்­தார். நிகிதா கவுல் குறு­கிய சேவை ஆணை­யத்­தின் (எஸ்.எஸ்.சி) தேர்வு மற்­றும் நேர்­கா­ணலை வெற்­றி­கர முடித்து இப்­போது தகுதி பட்­டி­ய­லுக்­காக காத்­தி­ருக்­கி­றார்.

“விபு தியாக மர­ண­ம­டைந்த ஆறு மாதங்­க­ளுக்­குப் பிறகு நான் எஸ்.எஸ்.சி படி­வத்தை நிரப்­பி­னேன். வலியை போக்­கு­வ­தற்­கான என் வழி இது,” என்­கி­றார். நான் பரீட்சை எழுதி நேர்­கா­ணலை முடித்­த­போது, அவர் அவ­ரு­டைய எஸ்.எஸ்.சி எழு­தி­ய­போது எப்­படி உணர்ந்­தி­ருப்­பார் என்­பதை என்­னால் உணர முடிந்­தது. பரீட்சை எழு­தும் போது அவ­ருக்கு இருந்த பயம், பதட்­டத்தை என்­னா­லும் உணர முடிந்­தது. எப்­ப­டியோ அது எனக்கு பலத்­தைக் கொடுத்­துள்­ளது. ஆனால், இம்­மு­டிவை எடுக்கு எனக்கு சில காலம் தேவைப்­பட்­டது. ஏனெ­னில் ‘என்ன நடந்­தது’ என்­பதை நான் முத­லில் ஏற்­றுக்­கொள்ள காலம் தேவைப்­பட்­டது. விபு மிக­வும் முற்­போக்­கா ­ன­வர். நான் அவரை விட சிறப்­பாக செயல்­பட வேண்­டும் என்று அவர் விரும்­பி­னார். எனவே, இந்­திய ராணு­வத்­தில் சேரு­வ­தற்­கான எனது முடி­வைப் பற்றி எனக்கு ஏதே­னும் கவலை அல்­லது சந்­தே­கம் ஏற்­பட்­டால், நான் கண்­களை மூடிக்­கொண்டு விபூ என்ன செய்­வார் என்று யோசிப்­பேன். ராணு­வத்­தில் சேரும் எனது முடி­வில் அவர் முக்­கி­யப் பங்கு வகித்­தார்,” என்­றார் நிகிதா.

யுத்­தத்­தில் உயிர் நீத்த ராணுவ வீரர்­க­ளது மனை­வி­கள் ராணு­வச் சேவையை தொடர விரும்­பி­னால் அவர்­க­ளுக்­காக வயது வரம்பு தளர்த்­தப்­பட்­டா­லும், தேர்வு முறை­கள் மற்­ற­வர்­க­ளுக்கு போல கடி­ன­மான ஒன்றே. “நான் தகுதி பெற மிக­வும் கடி­ன­மாக உழைத்­தேன். இப்­போது நான் ஒரு வருட பயிற்­சி­யில் சிறந்து விளங்க விரும்­பு­கி­றேன். எல்­லோ­ருக்­கும் பெருமை சேர்க்­கக்­கூ­டிய ஒரு அதி­கா­ரி­யாக நான் இருக்க விரும்­பு­கி­றேன். விபு­வும் பெரு­மைப்­ப­டு­வார்,” என்­றார் நிகிதா.  ஜம்மு - காஷ்­மீ­ரைச் சேர்ந்த நிகி­தா­வின் குடும்­பத்­தி­னர் 1990ம் ஆண்­டு­க­ளில் டில்­லிக்கு குடி­பெ­யர்ந்­துள்­ள­னர். எம்.பி.ஏ பட்­டம் பெற்ற நிகிதா, நொய்­டா­வில் உள்ள ஐ.டி நிறு­வ­னம் ஒன்­றில் பணி­யாற்றி வரு­கி­றார். விரை­வில் சென்­னை­யில் உள்ள ராணுவ அதி­கா­ரி­கள் பயிற்சி அகா­ட­மி­யில் சேரு­வ­தற்­காக ஐடி பணி­யி­லி­ருந்து விலக உள்­ளார். ஆனால், பயிற்சி அகா­ட­மி­யில் சேர்ந்­த­பின் அவ­ரு­டைய கண­வ­ரின் அல­மா­ரி­யை­யும் அத­னுள் உள்ள அவ­ரு­டைய சீருடை, லிப் பாம், லைட்­டர் மற்­றும் டூத் பிரஷ்ஷை மிஸ் செய்­யப்­போ­வ­தாக” என்­கி­றர்.  நிகிதா எம்­பிஏ படிக்­கும் போது மேஜர் விபூ­டியை சந்­தித்­துள்­ளார் - அவர்­க­ளு­டைய காதல் கதை­யைப் பற்றி நிகிதா பகிர தயா­ராக இருப்­பது இதை மட்­டும் தான்.Trending Now: