பாட்டிமார் சொன்ன கதைகள் – 259 – சுதாங்கன்

11-03-2020 01:16 PM

தர்மர் தோற்றார் சகுனி ஜெயித்தார்...

விது­ரன் வந்­தான், ``அண்ணா! உம்­மு­டைய புத்­தி­ரர்­க­ளான கெள­ரவ பாண்­ட­வர்­க­ளுக்­கி­டையே விரோ­தம் வரா­ம­லி­ருக்­கும்­படி செய்­ய­வேண்­டும்’ என்று எவ்­வ­ளவோ நல்ல வார்த்தை சொன்­னான். திரு­த­ராஷ்­டி­ர­னும் துரி­யோ­த­ன­னைப் பார்த்து, விது­ரம் சொல்­வதே நமக்கு நன்மை என்று எவ்­வ­ளவோ சொல்­லிப் பார்த்­தான். துரி­யோ­த­னன் செவி­யிலோ அந்த வார்த்­தை­கள் விழ­வே­யில்லை. யாகத்­தில் வந்த காணிக்­கை­களை நினைத்­துக் கொண்டே ஏங்­கிக் கொண்­டி­ருந்­தான். அந்த யாகாக்­கினி உள்­ளத்தை சுடு­வது போலி­ருந்­தது.

 முடி­வில் தந்தை மகன் மேலுள்ள பாசத்­தால் சகு­னி­யின் யோச­னைக்கு இணங்­கி­விட்­டான். தன்­னு­டைய வில பந்­த­யங்­க­ளென்­றும், காய்­கள் அம்­பு­க­ளென்­றும் சகுனி சொன்­னான். வெறுந்­தர்­ம­மா­வது யுத்­த­மா­வது யுத்­த­மா­வது ஜயத்­துக்­குச் சாத­க­மா­க­தென்­றும் வற்­பு­றுத்­தி­னான். அவ­னு­டைய  நோக்­கம் வெளிப்­பட்­ட­தும் விது­ரன், `` அந்­தப் போர் வேறு போர்­க­ளை­யும் உண்­டாக்­கி­வி­டும். காய்­க­ளும் பந்­த­யங்­க­ளும் கூர்­மை­யான அம்­பு­க­ளை­யும் கத்­தி­க­ளை­யும் உண்­டாக்கி விடுமே’’ என்று எவ்­வ­ளவோ எச்­ச­ரிக்கை செய்து பார்த்­தான். திரு­த­ராஷ்­டி­ரனோ விதி பெரி­தென்­றும் கடக்க முடி­யா­தென்­றும் சொல்­லி­விட்­டான்.  பாண்­ட­வர்­கள் செய்த விருந்­துக்கு எதிர் விருந்து செய்­வ­தென்று கெள­ர­வர்­கள் தீர்­மா­னித்­தார்­கள். அவர்­க­ளு­டைய சபா மண்­ட­பத்­திர்­குப் போட்­டி­யா­க­தக் தாங்­க­ளும் ஒரு மண்­ட­பம் நிர்­மா­ணம் செய்­தார்­கள். ஆயி­ரன் தூண்­க­ளோ­டும், நூறு வாசல்­க­ளோ­டும் இரத்­தின மய­மான தள­வ­ரி­சை­க­ளோ­டும் ஒரு சபா மண்­ட­பம் செய்­யப்­பட்­டுப் பொன்­னா­லும் வைடூ­ரி­யக் கற்­க­ளா­லும் விசித்­தி­ர­மாக அலங்­க­ரிக்­கப்­பட்­டது. அந்த மண்­ட­பத்­திலே மிக்க விலை பெற்ற ஆச­னங்­க­ளும் படுக்­கை­க­லும் நிரம்­பி­யி­ருந்­தன.  திரு­த­ராஷ்ட்­ரன் விது­ர­னைப் பார்த்து, ` நீ இப்­போதே வாயு வேக­மான ரதத்­தி­லே­றிப் போய் பாண்­ட­வர்­களை அழைத்து வர­வேண்­டும். தரு­ம­புத்­தி­ரன் சகோ­த­ரர்­க­ளோடு வந்து இதைப் பார்க்க வேண்­டும். சகோ­த­ரர்­க­ளுக்­குள் ஒரு சூதாட்­ட­மும் சினே­கித முறை­யில் நடக்க வேண்­டும் . நான் சொன்­ன­தா­கச் சொல்­லிச் சீக்­கி­ர­மாய் அழைத்து வா ‘ என்­றான். விது­ரன் எவ்­வ­ளவோ மறுத்­துச் சொல்­லி­யும் பயன்­ப­ட­வில்லை. இனி இந்­தக் குலம் இல்லை ‘ என்று சொல்­லிக்­கொண்டே விது­ரன் புறப்­பட்­டுப் போனான்.  ` நீர் ஏன் மகிழ்ச்­சி­யில்­லா­ம­லி­ருக்­கி­றீர்? பிள்­ளை­கள் கிழ­வ­ருக்கு அடங்­கி­யி­ருக்­கி­றார்­களா ?’ என்று நலம் விசா­ரித்த தரு­ம­புத்­தி­ர­னைப் பார்த்து விது­ரன் நடந்­த­தை­யெல்­லாம் தெரி­வித்­தான். மோசக்­கா­ர­னான சகு­னி­யின் சூழ்ச்­சி­யைக் குறித்­தும் பிரஸ்­தா­பித்­தான். `` சூதாட்­டத்­தால் கல­கம் நிச்­ச­யம் ‘ என்று தெரிந்­தி­ருந்­தும், தர்­ம­புத்­தி­ரன், திரு­த­ராஷ்ட்ர மகா­ரா­ஜா­வின் கட்­டளை என்று இனத்­தா­ரோ­டும் வேலைக்­கா­ரர்­க­ளோ­டும் புறப்­பட்­டான். ` சடு­தி­யில் வந்து விழும் மின்­னல் கண்­க­ளைப் பறிப்­பது போல் விதி­யா­னது மதி­யைப் பறித்து விடு­கி­றது ‘ என்று தனக்­குள் தானே சொல்­லிக் கொண்­டான்.

 அஸ்­தி­னா­பு­ரத்­தில் பாண்­ட­வர்­கள் பிர­வே­சித்து அரண்­ம­னைக்­குப் போய், திரு­த­ராஷ்­டி­ரன் முத­லா­ன­வர்­க­ளைச் சந்­தித்து வணங்­கி­னார்­கள். புதிய சபா மண்­ட­பத்­திலே கெள­ர­வர்­க­ளும் பாண்­ட­வர்­க­ளும் மற்ற அர­சர்­க­ளும் துரோ­ணர் முத­லா­ன­வர்­க­ளும் தகு­திப்­படி ஆச­னங்­க­ளில் அமர்ந்­தார்­கள். அப்­போது சகுனி தரு­மனை நோக்கி, ` தரு­ம­ரா­ஜாவே ! புருஷ சிரேஷ்­டனே! எல்­லா­ரும் உன்னை எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். காய்­களை உருட்­டிக் கொஞ்ச நேரம் பொழுது போக்­கு­வோம். சோர்­வில்­லா­மல் முறை தெரிந்து கணக்­கை­யும் ஆட்­டத்­தை­யும் கவ­னைப்­ப­தில் எவ்­வ­ளவு அறி­வுத்­தி­ற­மை­யும் தேர்ச்­சி­யு­மி­ருக்­கின்­றன !’’ என்று அமை­தி­யா­கச் சொன்­னான்.

 சூதாட்­டம் மோச­மா­ன­தென்­றும், பாவ­மா­ன­தென்­றும் தரு­மன் சொன்­னான். `` ராஜாதி ராஜனே ! பயப்­ப­டாதே ‘ என்­றான் சகுனி.  யுத்­தமே தர்­ம­யுத்­த­மாக இருக்­க­கூ­டு­மென்­றால் சூது போரில் என்ன அதர்­மம் இருக்க முடி­யும் ?’ என்­றும் ஒரு கேள்வி போட்­டான். ` உனக்­குப் பயம் ஏற்­ப­டும்­போது ஆட்­டத்தை விட்­டு­விடு ‘ என்­றும் சொன்­னான்.

 ` அழைக்­கப்­பட்ட பின் திரும்­பு­வ­தில்லை. இது விர­தம் ‘ என்று சொல்­லிக்­கொண்டே தரு­மன் சகு­னி­யோடு சூதா­டத் தொடங்­கி­னான். ` என் மாமா எனக்­காக ஆடு­வான். உன் பந்­த­யத்­திற்கு நான் எதிர்ப்­பந்­த­யம் வைப்­பேன் ‘ என்­றான் துரி­யோ­த­னன். விது­ரம் மன­தில் திருப்­தி­யே­யில்லை.

 ` இந்த இரத்­தி­னம் என் பந்­த­யம் ‘ என்­றான் தரு­மன். காய்­க­ளைக் கையில் எடுத்த சகுனி, ` இந்த ஆட்­டத்தை ஜயித்­தேன் ‘ என்­றான். தரு­ம­புத்­தி­ரன் தங்­கத்­தைப் பெட்டி பெட்­டி­யாக வைத்­தா­டி­னான். ` ஜயித்­தாய்­விட்­டது ‘ என்­றான் சகுனி. தரு­மன் இர­தங்­க­ளை­யும் குதி­ரை­க­ளை­யும் யானை­க­ளை­யும் வைத்­தா­டி­னான். வேலைக்­கா­ரர், வேலைக்­கா­ரி­க­ளை­யும் வைத்­தா­டி­னான்.  மோசத்­தைக் கடை­பி­டித்­த­வ­னாய் ` ஜயித்­தா­யிற்று, ஜயித்­தா­கி­விட்­டது ‘ என்­றான் சகுனி. துரி­யோ­த­னன் அடைந்த உற்­சா­கத்­திற்கு அள­வே­யில்லை.  இப்­படி தரு­ம­னு­டைய பொருள்­க­ளை­யெல்­லாம் அந்­தக் கொடிய சூதாட்­டம் விழுங்­கிக் கொண்­டே­யி­ருந்­தது. அப்­போது விது­ரன் திரு­த­ராஷ்ட்­ர­னைப் பார்த்து, `பாண்­ட­வர்­க­ளுக்கு துரோ­கம் செய்­ய­லா­காது. சூது கல­கத்­திற்கு வேர். துரி­யோ­த­னன் ஜயிக்­கி­றான் என்று பிரி­யப்­ப­டு­கி­றீர். தேனெ­டுக்­கும் வேடன் மலைச்­ச­ரி­வைப் பாரா­மல் விழுந்து விடு­வது போல் நீங்­க­ளும் மயங்கி விழுந்து விடப்­போ­கி­றீர்­களே!’’ என்­றெல்­லாம் புத்தி சொல்­லத் தொடங்­கி­னான். விது­ர­னு­டைய அபிப்­பி­ரா­யத்­தைப் பீஷ்­மர் முத­லா­ன­வர்­க­ளும் ஆத­ரித்­துச் சூதாட்­டத்தை உடனே நிறுத்­தி­வி­ட­வேண்­டு­மென்று வற்­பு­றுத்­தி­னார்­கள்.  துரி­யோ­த­னன் மனம் மறு­ப­டி­யும் கலக்­க­ம­டைந்­தது. அவன் பெரு­மூச்சு விட்­டுக்­கொண்டே மாமா­வின் முகத்­தைப் பார்த்­தான்.

` நீர் எப்­போ­தும் எங்­களை சிறு­வர்­க­ளா­கவே நினைத்­துப் பேசு­கி­றீர்­கள். பிற­ரையே புகழ்­கி­றீர். இந்த ஆட்­டத்­திலே அதிர்ஷ்ட தேவி­யின் கிரு­பை­யால், நாங்­கள் பகை­வர்­களை ஜயைத்­துப் பெரிய லாபம் அடைந்து கொண்­டி­ருக்­கும்­போது, எங்­க­ளைப் பார்த்­துக் கடுஞ்­சொற்­க­ளைச் சொல்­லு­கி­றீர். அய­லார் காரி­யங்­க­ளில் நீர் தலை­யிட வேண்­டாம். எனக்கு எது நன்­மை­யென்று உம்­மைக் கேட்­டேனா ? என்­றெல்­லாம் துரி­யோ­த­னன் சொல்லி, விது­ரன் சொன்ன விதத்­தைக் கொஞ்­ச­மும் அங்­கீ­க­ரிக்­க­வில்லை.Trending Now: