கஷ்டம் தெரிஞ்சு வளர்ந்தவன்! – நந்தன்

10-03-2020 01:18 PM

பல  ஆண்­டு­க­ளுக்கு முன்  தனது அம்­மா­வு­டன் சேர்ந்து  ‘சித்தி’ சீரி­யலை ஒரு எபி­சோட் கூட விடா­மல் பார்த்து ரசித்­த­வர், நந்­தன் (‘வந்­தாள் ஸ்ரீதேவி’ சீரி­ய­லின் அறி­முக ஹிரோ).  அப்­படி அதன் பார்­வை­யா­ள­ரா­க­வும் ரசி­க­ரா­க­வும் இருந்­த­வர்,  இப்­போது அதன் இரண்­டா­வது பாகத்­தில் அவரே  நடிக்­கி­றார் என்­றால், எவ்­வ­ளவு பெரிய ஆச்­ச­ரி­யம்! இதை அவரே  எதிர்­பார்த்­தி­ருக்­க­மாட்­டார்.

அவ­ரு­டைய ‘சுருக்’ பேட்டி....

   “எனக்கு பூர்­வீ­கம் சென்னை. பிறந்­தது படிச்­சது வளர்ந்­த­தெல்­லாம் அங்­கே­தான்.  காலே­ஜிலே படிச்­சுக்­கிட்டு இருக்­கும்­போது என்­னோட பிரண்ட் ஒருத்­தன் சும்மா கேஷு­வலா என்னை டைரக்­டர் பாலு­ம­கேந்­திரா சார்­கிட்ட கூட்­டிக்­கிட்டு போனான். அவர் என்னை பார்த்­துட்டு, உனக்கு நடிக்­கி­ற­திலே ஆர்­வம் இருக்­கான்னு கேட்­டார். எனக்கு நடிப்பை பத்தி ஒண்­ணும் தெரி­யா­துன்னு சொன்­னேன். உடனே அவர், உனக்கு  நடிப்பு சொல்லி கொடுத்தா நடிப்­பி­யான்னு கேட்­டார். சொல்லி கொடுத்தா  நடிப்­பேன்னு சொன்­னேன். அப்­படி சொன்­ன­தும், என்னை போட்­டோ­ஷூட் எடுத்­தார். என்­னோட ஸ்டில்­களை பார்த்­துட்டு என்னை ஒரு படத்­துக்­காக செலக்ட் பண்­ணாரு.  ஆனா, துர­திர்ஷ்­ட­வ­சமா அந்த படம் பாதி­யி­லேயே நின்னு போச்சு.  மேற்­கொண்டு படிக்க போறேன்னு அவர்­கிட்ட சொன்­ன­போது ”உன் கண்­கள் ரொம்ப நல்லா இருக்கு. உனக்­குள்ளே ஒரு ‘நடி­கன்’  இருக்­கான். உனக்கு சினி­மா­விலே நல்ல எதிர்­கா­லம் இருக்கு.  அத­னால சினி­மா­விலே முயற்சி பண்­ணிக்­கிட்டே இரு!” அப்­ப­டீன்னு என்னை உற்­சா­கப்­ப­டுத்­தி­னார். அவர் கொடுத்த நம்­பிக்­கை­தான் என்னை தொடர்ந்து மீடி­யா­விலே இருக்க வச்­சுக்­கிட்டு இருக்கு.

   ஒரு நாள் ரடான் கம்­பெ­னி­யிலே இருந்து என்னை வர சொல்லி போன் பண்­ணாங்க. ராதிகா மேடம் நடிக்­கிற சீரி­யல்ல நடிக்­க­ணும்னு சொன்­னாங்க. தாரா­ளமா நடிக்­கி­றேன்னு சொன்­னேன். ராதிகா மேடம் என்னை பார்த்­த­தும், “நீங்க  நடிச்­சி­ருந்த ‘லட்­சுமி’ குறும்­ப­டத்தை பார்த்­தேன். அதிலே நீங்க நல்லா நடிச்­சி­ருந்­தீங்க. அதை பார்த்­துட்­டுத்­தான்  எங்க சீரி­ய­லுக்கு உங்­களை செலக்ட் பன்­ணோம்!”ன்னு சொன்­னாங்க. ‘லட்­சுமி’ குறும்­ப­டம் நல்லா பேமஸ் ஆச்­சுங்­கி­றது உண்மை. அது எனக்கு பெரிய அள­விலே பேரும் புக­ழும் கொடுத்­துச்சு. அது யூ டியூப்ல வெளி­யான ஒரு வாரத்­துக்­குள்­ளேயே என்னை  பார்க்­கி­ற­வங்க ரொம்ப ஆர்­வமா என்­னோடு செல்பி எடுத்­துக்­கிட்­டாங்­கன்னா பார்த்­துக்­குங்­க­ளேன்! ஆனா, அது வந்து ரொம்ப கால­மாச்சு. அப்­படி இருந்­தும், என்னை ஞாப­கம்  வச்சு என்னை கூப்­பிட்­டது உண்­மை­யி­லேயே பெரிய விஷ­யம்!  ‘லட்­சு­மி’க்கு பிறகு எனக்கு நிறைய சீரி­யல்ல இருந்­தும், சினி­மா­விலே இருந்­தும்  வாய்ப்­பு­கள் வந்­துச்சு. ஆனா, அது எல்­லாமே ‘லட்­சு­மி’­­­யிலே இருந்த மாதி­ரி­யான கேரக்­டர்­க­ளா­கவே இருந்­த­தால, நான் நடிக்க சம்­ம­திக்­கலே.

   ராதிகா மேடத்­தோட சீரி­யல்ல, நடிப்­பிலே நிறைய கத்­துக்க முடி­யும்­னு­தான் ‘சித்தி 2’விலே நடிக்க ஒத்­துக்­கிட்­டேன். அதிலே ‘நவீன்’ பணக்­கார பையன் கேரக்­டர்ல நடிக்­கி­றேன். நிஜத்­திலே, நான் ஒரு நடுத்­தர குடும்­பத்தை சேர்ந்­த­வன். கஷ்­டத்தை தெரிஞ்சு வளர்ந்­த­வன்.   என் கேரக்­ட­ருக்கு என்னை எப்­படி மாத்­திக்­க­ணும்னு டைரக்­டர் சார் (சுந்­தர் கே. விஜ­யன்) எனக்கு நல்லா சொல்லி கொடுக்­கி­றாரு. அவர் சொல்லி கொடுக்­கி­ற­படி நடிக்­கி­றேன். என்­னோட நடிப்பை நிறைய பேர் பாராட்­டு­றாங்க.”Trending Now: