‘மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை 2’ ஒளிபரப்பு ஆரம்பம்!

10-03-2020 01:17 PM

விஜய் டிவி­யில் ‘மிஸ்­டர் அண்ட் மிசஸ் சின்­னத்­திரை’ 2வது சீசன் சனி மற்­றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் இரவு 9.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது. பிர­பல டிவி – சினிமா ஜோடி­கள் தங்­கள் வாழ்க்­கைத்­து­ணை­யு­டன் பங்­கேற்­கி­றார்­கள்.

இந்த சீச­னில் வித்­தி­யா­ச­மான விளை­யாட்­டுக்­கள், காதல், நட­னம் என்று ஏரா­ள­மான போட்­டி­கள் இடம்­பெ­று­கின்­றன.  

இந்த நிகழ்ச்சி மூலம் தம்­ப­தி­க­ளின் புரி­தல் மற்­றும் அவர்­கள் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் எவ்­வாறு புரிந்து வைத்­துக்­கொண்டு போட்­டி­யில் வெல்­கி­றார்­கள் என்­பதை பார்க்­க­லாம்.

ரம்யா என்.எஸ்.கே. – -சத்யா, அன்­வர் -– சமீரா, ‘பாண்­டி­யன் ஸ்டோர்ஸ்’ புகழ் கும­ரன் –- சுஹா­சினி, ‘சுந்­தரி நீயும் சுந்­த­ரன் நானும்’ புகழ் வினோத் –- சிந்து, ரகு –- தாபா, ‘சூப்­பர் சிங்­கர்’ புகழ் மூக்­குத்தி முரு­கன் –- கிருஷ்­ண­வேணி, ‘கலக்­கப்­போ­வது யாரு’ புகழ் ராமர்- – கிருஷ்­ண­வேணி, டி.எஸ்.கே. –- வைஷ்­ணவி, பழனி – - சங்­கீதா, அஞ்­சலி – பிர­பா­கர் ஆகிய ஜோடி­கள் பங்­கேற்­கின்­றன.

‘நீயா நானா’ கோபி­நாத்­தும் நடிகை தேவ­தர்­ஷ­னி­யும் நடு­வர்­க­ளாக செயல்­பட, மா.கா.பா. ஆனந்த் – நிஷா இரு­வ­ரும் நிகழ்ச்­சியை தொகுத்து வழங்­கு­கின்­ற­னர்.Trending Now: