கண்ணதாசன் பற்றிய நிகழ்ச்சி!

10-03-2020 01:16 PM

ராஜ் டிவி­யில் ‘கவி­ய­ர­சர் கண்­ண­தா­சன்’ நிகழ்ச்சி திங்­கள் முதல் சனி வரை மாலை 5.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பாகி வரு­கி­றது.

காலத்­தால் அழி­யாத பாடல்­க­ளைத் தந்­த­வர் கவி­ய­ரசு கண்­ண­தா­சன். வாழ்­வின் எல்லா திசை­க­ளி­லும் பய­ணித்­தது அவ­ரது தமிழ். பாடல் எனும் வடி­வத்­தின் வழி­யாக தமி­ழர்­க­ளின் நெஞ்­சங்­க­ளில் இனிமை சேர்த்த கவி­ய­ர­ச­ரின் சுவை மிகுந்த பாடல்­க­ளை­யும் அதன் பின்­ன­ணி­யை­யும் சுவா­ரஸ்­ய­மாக வழங்­கும் நிகழ்ச்சி இது.

மொழியை மிக எளி­மை­யாக, பாம­ர­னுக்­கும் புரி­கிற வடி­வில் பாடல் வழியே புகுத்­தி­ய­வர் கவி­ய­ர­சர். ஒரு திரைப்­ப­டம் சொல்ல வந்த கருத்தை உள்­வாங்­கிக்­கொண்டு, காட்­சிக்கு ஏற்ப தனது வரி­க­ளால் அலங்­க­ரித்­த­வர். கதை­யோடு உற­வா­டும் மொழியை தனக்­கென வரித்­துக்­கொண்டு அந்த நுட்­பத்­தின் மூலம் உச்­சம் தொட்ட சாத­னை­யா­ளர் அவர்.Trending Now: