உளவியல் ஆலோசனை!

10-03-2020 01:14 PM

பெப்­பர்ஸ் டிவி­யில் ‘காதோ­டு­தான் நான் பேசு­வேன்’ உள­வி­யல் ஆலோ­சனை நிகழ்ச்சி திங்­கள் தோ­றும் காலை 11 மணிக்கு நேர­லை­யாக  ஒளி­ப­ரப்­பா­கி­றது. மன­நல ஆலோ­ச­கர் ராஜ­ரா­ஜேஸ்­வரி ஆலோ­சனை வழங்­கு­கி­றார்.

மனம் சொல்­வதை உடல் கேட்க வேண்­டும். மன­மும் உட­லும் ஒரு நேர்க்­கோட்­டில் பய­ணிக்­கும் போது வாழ்வு இனிப்­பா­கும். நாட்­கள் மகிழ்­வா­கும். ஆனால் இன்­றைய சூழ­லில் பெரும்­பா­லா­னோ­ருக்­கும் ஒரே பிரச்னை, மனம். இல்­லற வாழ்­வில் விட்­டுக்­கொ­டுக்­காமை, காதல் உற­வில் விரி­சல், ஆழ­மான உணர்­வு­களை யாரி­டம் பகிர்ந்து கொள்­வது என்­ப­தில் குழப்­பம். ஒரு முறை அடுத்­த­வ­ரி­டம் மன அழுத்­தத்தை இறக்கி வைத்­து­விட்­டால் பாரம் குறைந்­து­வி­டும், மனம் இள­வா­கி­வி­டும். துக்­கம் கூட சுக­மா­கும்.

யாரி­டம் சொல்­வது? அதற்­கான பதிலே இது.Trending Now: