இனி தித்திக்கும் பால் பாயசம் எளிமையாக சமைக்கலாம்

06-03-2020 10:00 AM

தேவையான பொருள்கள்:

பால் - 600 மி.லிட்டர், பச்சரிசி - 3 மேஜைக்கரண்டி, சர்க்கரை - 300 கிராம், முந்திரிப்பருப்பு - 25, உலர்ந்த திராட்சை - 25, ஏலக்காய் - 5, நெய் - 2 தேக்கரண்டி .

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்ச வேண்டும். அரிசியை மற்றொரு பாத்திரத்தில் தாராளமாக நீர் விட்டு ஊறவையுங்கள். அது நன்றாக ஊறியதும் எடுத்து மிருதுவாக அறைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில் இருப்புச்சட்டியை வைத்து நெய்விட்டு அது காய்ந்ததும் முதலில் முந்திரிப்பருப்பையும், பிறகு திராட்சையையும் போட்டு வறுத்து எடுத்துத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். ஏலக்காயைத் தட்டித் தூளாக்கி ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

பால் நன்றாகக் காய்ந்து பாதியாகச் சுண்டியதும், அரிசி மாவைக் கரைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறிவிடுங்கள். அது வெந்து கெட்டியானதும், சர்க்கரையைப் போட்டுக் கிளறி விடுங்கள். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு வறுத்த முந்திரிப் பருப்பையும் திராட்சையையும் போடவேண்டும். கடைசியாக ஏலக்காய்த் தூவி இறக்கினால் சுவையான பால் பாயசம் தயார்.
Trending Now: