தமிழ் என் கூடவே இருக்கணும்னு நினைப்பேன்! – -ஆர்த்தி

04-03-2020 01:54 PM

“சைவ உணவை ஓர­ள­வுக்கு நல்லா சமைப்­பேன். குறிப்பா, வறு­வல் அயிட்­டங்­களை நல்லா பண்­ணு­வேன். கசப்பு இல்­லாம பாவக்­காய் வறு­வல், கோவக்­காய் வறு­வல், வாழைக்­காய் மசி­யல், கத்­த­ரிக்­காய் – முருங்­கைக்­காய் கூட்டு இதெல்­லாம் நல்லா பண்­ணு­வேன். மத்­த­படி, சமை­யல்ல நான் சுமார் ரகம்­தான்!” என்று சிரித்­துக்­கொண்டே சொன்­னார்  நிகழ்ச்சி தொகுப்­பா­ளர் ஆர்த்தி.

முதன்­மு­த­லாக  மக்­கள் தொலைக்­காட்­சி­யில்  ‘சொல் விளை­யாட்டு,’ ‘சின்ன சின்ன ஆசை,’ ‘மக்­கள் இசை,’ பாரம்­ப­ரிய சமை­யல்,’ பொதிகை டிவி­யில் ‘குயில் தோப்பு,’ ‘மேட்னி ஷோ,’  சன் டிவி­யில் ‘சூரிய வணக்­கம்,’ ‘ராசி பலன்­கள்’ உட்­பட நேரடி ஒளி­ப­ரப்பு நிகழ்ச்­சி­கள் போன்­ற­வற்றை தொகுத்து வழங்­கி­யுள்­ளார். அவர் இப்­போது புது யுகத்­தில் ‘ருசிக்­க­லாம் வாங்க’ சமை­யல் நிகழ்ச்­சியை தொகுத்து  வழங்கி வரு­கி­றார்.

அவ­ரு­டைய பேட்டி:-

* ‘ருசிக்­க­லாம்  வாங்க’ வாய்ப்பு....

இந்த நிகழ்ச்சி இதுக்கு முன்­னா­டியே வேறொரு டீம் பண்ணி 700, 800 எபி­சோ­டு­கள் வரை ஒளி­ப­ரப்­பாகி­யி­ருந்­துச்சு. அது மக்­கள்­கிட்ட நல்ல முறை­யிலே ரீச் ஆச்சு. செட்­டெல்­லாம் மாத்தி அதை இன்­னும் கொஞ்­சம் பெரிய லெவல்ல புதுசா செய்­ய­ணும்னு முடிவு பண்ணி,  சமை­யல் நிகழ்ச்சி பண்­றீங்­க­ளான்னு  என்னை கேட்­டாங்க. ‘பாரம்­ப­ரிய சமை­ய’­­­லுக்கு பிறகு நான் வேற சமை­யல் நிகழ்ச்சி எது­வும் பெருசா பண்­ணலே. சரி, பண்­றேன்னு ஒத்­துக்­கிட்­டேன். இதிலே கலந்­துக்­கிட்டு சமைக்­கிற ஒவ்­வொ­ருத்­த­ரும் ஒவ்­வொரு விதம். கல்­லூரி மாணவி,  இல்­லத்­த­ரசி, பணிப்­பெண்…… இப்­படி பல­வி­தமா வர்­றாங்க. ஒவ்­வொரு தரப்­பி­லே­யும் சமை­யல் கலை­யிலே வல்­லு­னரா இருக்­காங்க அப்­ப­டீங்­க­றதை வெளிப்­ப­டுத்­துற மாதிரி இருக்கு. அவங்க கொடுக்­கிற உண­வும் வெரைட்­டி­யான உண­வு­களா இருக்கு. நாம உணவை எத்­தனை தடவை கத்­துக்­கிட்­டா­லும், மறு­ப­டி­யும் பார்த்தா கூட அப்­டேட் பண்ணி கத்­துக்­க­ணும்­னு­தான் எல்­லா­ருக்­குமே ஆசை வரும். ஒரு அம்­மாவா ஒரு நல்ல எண்ட்­ரியா இந்த புரோ­கி­ராமை நினைக்­கி­றேன்.                

*  அனு­ப­வம் எப்­படி இருக்கு?

சமை­யல் நிகழ்ச்­சி­யிலே முன்­னெல்­லாம் சுவை­யி­லே­யும், சமை­யல் பண்­ற­வங்­க­ளோட அனு­ப­வத்தை ஷேர் பண்­ணிக்­கி­ற­தி­லே­யும் கவ­னம் செலுத்­து­வேன். ஆனா, இப்போ நான் ஒரு அம்­மாவா இருக்­கி­ற­தால, இதை குழந்­தைக்கு செஞ்சு கொடுத்தா நல்லா இருக்­கும், இதை கண­வ­ருக்கு செஞ்சு கொடுத்தா நல்லா இருக்­கும், இதை நம்ம வீட்ல முயற்சி பண்­ண­லாம்னு அந்த ஈடு­பாடு இன்­னும் அதி­க­மா­யி­டுது. இது எனக்கு ரொம்ப பிடிச்­சி­ருக்கு.

*  நீங்க சமை­யல்ல எப்­படி?

நான் சுமா­ரா­தான் சமைப்­பேன். ஆனா, என் அம்­மா­வும் மாமி­யா­ரும் சமை­யல்ல ‘ராணி’­­­கள்­தான். அசைவ உண­வு­கள்ல ரெண்டு பேருமே பின்னி பெட­லெ­டுத்­தி­டு­வாங்க.

*  இந்த நிகழ்ச்­சி­யிலே  நீங்க ஏதா­வது  கத்­துக்­கி­றீங்­களா?

ஆமா, கத்­துக்­கிட்டே இருக்­கேன்.

*  டேஸ்ட் பண்ணி பார்ப்­பீங்­களா?

நான்­தான் முதல்ல டேஸ்ட் பண்­றது. அந்த சம­யத்­திலே, அதிலே இருக்­கிற நிறை­கு­றை­களை சொல்­லு­வேன்.

*  பொதுவா, சமை­யல் நிகழ்ச்­சி­கள்ல நிறை­கள் மட்­டுமே ’ஆகா ஓகோ’ன்னு சொல்­லப்­ப­டு­றது வழக்­கம். நீங்க குறை­கள் சொல்­ற­துண்டா!!!!!

ஓ…..  சொல்­லு­வேனே! இன்­னும் கொஞ்­சம் உப்பு போட்டா நல்லா இருக்­கும், புளிப்பு வேணும்னா லெமன் சேர்த்­துக்­கிட்டா இன்­னும் நல்லா இருக்­கும் …. இப்­படி பக்­கு­வமா எடுத்து சொல்­லு­வேன். அப்­ப­டித்­தான் சொல்ல சொல்­லி­யி­ருக்­காங்க. அது மட்­டு­மில்லே, குறை­களை எப்­படி நிவர்த்தி பண்­ண­ணும்ங்­கி­ற­தை­யும் கேட்டு சொல்­லி­டுங்க அப்­ப­டீன்­னும் சொல்­லி­யி­ருக்­காங்க.

*  வேற நிகழ்ச்­சி­கள் பண்­றீங்க?

பொதி­கை­யிலே (அர­விந்­து­டன் இணைந்து) ‘பாட்டு பாடு போட்டி போடு,’ உட்பட ரெண்டு நிகழ்ச்சிகள் பண்­றேன். அப்­பு­றம் ‘சூப்­பர் மாம்’ (ஜீ தமிழ்) நிகழ்ச்­சி­யிலே நானும் என் மகன் தியோ­ட­னும் கலந்­துக்­கி­றோம். அப்­பு­றம், எப்­எம் ரெயின்­போ­விலே தேர்வு எழுதி நான் செலக்ட் ஆகி­யி­ருக்­கேன். அதுக்கு 15 நாள் பயிற்சி கொடுத்து என்னை பண்­பலை தொகுப்­பா­ளரா உட்­கார வைப்­பாங்க. அது எனக்கு புது களம், தெரி­யாத கள­மும் கூட! புது அனு­ப­வத்தை எதிர்­நோக்­கி­யி­ருக்­கேன்.

*  பிளான்?

என்­னைக்­குமே நான் தேடி போறது கிடை­யாது. எனக்கு வரக்­கூ­டிய வாய்ப்பை சிறந்த வாய்ப்பா மாத்­திக்­க­ணும், அதிலே நான் இருந்­தேன் அப்­ப­டீங்­கற பதிவு நிச்­ச­யமா இருக்­க­ணும்னு நினைப்­பேன், தமிழ் என்­னைக்­கும் என் கூடவே இருக்­க­ணும்னு நினைப்­பேன். எனக்கு வலிமை சேர்க்­கக்­கூ­டி­யது, தமிழ். அந்த தமிழை நோக்கி எனக்கு என்­னென்ன வாய்ப்­பு­கள்­லாம் வருதோ முழுசா பயன்­ப­டுத்­த­ணும்னு பார்க்­கி­றேன். அடுத்­ததா, என் குழந்­தைக்­குன்னு ஒரு நல்ல வாழ்க்­கையை அமைச்சு கொடுக்­க­ணும்.

பிஎல் படிச்­சி­ருக்­கேன். பிராக்­டீஸ் பண்­ணலே. என் மக­னுக்கு அஞ்சு வய­சான பிறகு பிராக்­டீஸ் பண்­ண­லாம்னு இருக்­கேன்.

-–- -ம. வான­மு­தன்

Trending Now: