04-03-2020 01:07 PM
நடிகர்கள் : கார்த்தி, அனுஷ்கா ஷெட்டி, சந்தானம், நிகிதா, சனுஷா, அகன்ஷா பூரி, மிலிந்த் சோமன், சுமன், மகாதேவன், பிரதாப் போத்தன், விசு, ரேணுகா மற்றும் பலர். இசை : தேவி ஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவு : எஸ். சரவணன், எடிட்டிங் : பிரவீண் கே.எல், ஸ்ரீகாந்த்.என்.பி, தயாரிப்பு : ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, கதை, திரைக்கதை, இயக்கம் : சுராஜ்.
சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து வரும் அலெக்ஸ் பாண்டியன் (கார்த்தி) பணத்திற்காக ரிஸ்க் எடுக்க தயங்காதவன். தூரத்து சொந்தம் எனக்கூறிக் கொண்டு நன்பனின் (சந்தானம்) வீட்டிற்கு வருகிறான். தாய் ரேணுகா மற்றும் மூன்று தங்கைகளுடன் வாழ்ந்து வரும் நன்பனின் வீட்டில் மகிழ்ச்சியாக தங்குகிறான். அலெக்ஸிடமிருந்து தங்கைகளை காப்பாற்ற நினைக்கும் நன்பன் அலெக்ஸை விரட்டுகிறான். தன்னிடம் வம்பு செய்யும் உள்ளூர் ரவுடி ஒருவனை அடித்து மொட்டையடிக்கிறான் அலெக்ஸ். நன்பனின் குடும்பம் தேடி வரும் ரவுடி கும்பலிடமிருந்து அலெக்ஸை தப்பி ஓடச் சொல்ல, வேறொரு சமூக விரோதிகள் கும்பல் அலெக்ஸை துரத்துகிறார்கள். நன்பனின் குடும்பத்திடம் நடந்த உண்மைகளை அலெக்ஸ் விளக்குகிறான். மக்களின் உடல்நலத்திற்கு ஆபத்து விளைவிக்கும் மருந்தை தயாரிக்கும் மருந்து கம்பெனி முதலாளி (மிலிந்த் சோமன்), அவனது கூட்டாளி (சுமன்), போலிச் சாமியார் (மகா தேவன்) மூவரும் மருந்திற்கு அனுமதி வாங்க முதலமைச்சரை அனுகுகிறார்கள். நேர்மையான முதல்வர் (விசு) அதற்கு மறுத்து விடுகிறார். முதலமைச்சரின் கையெழுத்தை பெறுவதற்காக அவரின் மகள் திவ்யாவை (அனுஷ்கா ஷெட்டி) கடத்த முடிவெடுக்கிறார்கள். ஜெயிலிலிருந்து வெளிவரும் அலெக்ஸ் பணத்திற்காக திவ்யாவை மூன்று நாட்கள் காட்டில் கடத்தி வைத்திருக்கிறான். பதவிக்கான சண்டை என்று நினைக்கும் அலெக்ஸுக்கு இது மக்களின் உயிர் பாதுகாப்பு பற்றிய விஷயம் என்று திவ்யா எடுத்துக்கூறுகிறாள். மனம் மாறும் அலெக்ஸ் திவ்யாவை பாதுகாப்பாக திருப்பி அனுப்ப முடிவெடுக்கிறான். அடியாட்களுடன் போராடும் அலெக்ஸும் திவ்யாவும் உயிர் பிழைப்ப
தற்காக ஆற்றில் குதிக்கிறார்கள்.
தேடி வரும் விரோதிக ளுக்குத் தெரியாமல் காயமடைந்த திவ்யாவை கோவில் ஒன்றில் வைத்து மருத்துவம் பார்க்கிறான் அலெக்ஸ். திவ்யா சுயநினை
வில்லாமல் இருந்ததால் ஒளிந்திருந்த அலெக்ஸ், குணம டைந்ததும் அவளது தந்தையிடம் ஒப்படைக்க முயற்சிக்கி றார். முதல்வரின் பிஏ (பிரதாப் போத்தன்) திவ்யாவை அழைத்துப் போக வருகிறார். அவரும் விரோதிகளுடன் கூட்டணி அமைத்து திவ்யாவை பணயமாக வைத்து முதல்வரிடம் கையெழுத்து வாங்க நினைக்கிறார். முதல்வர் கோப்பில் கையெழுத்திட ஒரு மணி நேரம் தாமதிக்க, அலெக்ஸ் எதிரிகளோடு போராடி அவர்களை அழிக்கிறான். சரியான நேரத்தில் தந்தையை தொடர்பு கொள்ளும் திவ்யாவால் எதிரிகளின் திட்டம் தோற்கிறது. கையெழுத்திட மறுத்த முதல்வரை துப்பாக்கி முனையில் மிரட்டும் அவரது பிஏ, கமிஷனர் மற்றும் போலிச்சாமியார் அனைவரும் முதல்வரை பாதுகாக்கும் தனிப்படையால் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு காதலர்கள் ஒன்று சேர்கின்றனர்.