புரதத்தின் தேவை எவ்வளவு?

28-02-2020 08:51 PM

மனிதர்களின் உடல் வலிமைக்கு ஆதாரமாக விளங்கும் புரதச்சத்தை நாம் நாள் ஒன்றுக்கு எந்த அளவிற்கு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் நம் உணவுமுறை அமைய வேண்டும். அதுவே நம் உடல்நலனுக்கு நன்மை தரும். புரதச்சத்தின் தேவை வயது, பாலினம், வாழ்க்கை முறை, உடல் உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாறும். அதன்படி குழந்தைகள், பதின் பருவத்தினர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அதிகளவில் புரதச்சத்து தேவைப்படும்

.

அதேபோல் உடல்நலன் குன்றியவர்களுக்கும் புரதச்சத்தின் தேவை அதிகரிக்கும். உடல் திசுக்களில் ஏற்படும் அழற்சியை சீராக்கி புதிய திசுக்களை உற்பத்தி செய்ய புரதம் அவசியம்.

எனவே நம் தேவையை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு நம் உணவு பழக்கத்தை வகுத்து கொள்வது நலம்.

நமக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு புரதம் தேவை என்பதை அறிய ரைட் டு பிரோட்டின் (Right to Protein) என்ற இயக்கம் தன் இணையத்தளத்தில் புரதச்சத்தை அளவிடும் மீட்டரை அறிமுகம் செய்துள்ளது

அதில் நம் வயது, உடல் எடை, வாழ்க்கை முறை, பாலினம் ஆகியவற்றின் விவரங்களை அளித்தால் நமக்கு அன்றாடம் தேவைப்படும் புரதச்சத்தின் அளவை அந்த மீட்டர் வழங்கிவிடும்.

உதாரணமாக நாள் முழுவதும் அதிக உடல் உழைப்பு இன்றி உட்கார்ந்த இடத்திலேயே பார்க்கும் வேலையில் உள்ள ஒரு 30 வயது பெண்ணுக்கு நாள் ஒன்றுக்கு 64 கிராம் புரதச்சத்து தேவைப்படும்.

இதைத் தவிர நம் அன்றாடம் உண்ணும் உணவுப் பட்டியலை பெற்று நாம் எவ்வளவு புரதம் உண்கிறோம். அதில் எவ்வளவு கிராம் புரதம் பற்றாக்குறை உள்ளது என்ற தகவலையும் அளிக்கிறது.

நம் இணைய முகவரியை நாம் பதிவு செய்தால் நமது அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்ற பட்டியல் நமக்கு அனுப்பி வைக்கப்படும். 

அந்த இணையத்தளத்தை அணுக இங்கே சொடுக்கவும்

www.righttoprotein.com

புரதச்சத்து அதிகமுள்ள உணவுகள்

பருப்பு, பயிறு வகைகள், முட்டை, பால், தயிர், இறைச்சி, மீன், சோயா, முந்திரி, வால்நட், பாதாம், பிஸ்தா ஆகியவற்றில் புரதச்சத்து அதிகளவில் உள்ளது.

 Trending Now: