ஒரு நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் மேற்கு வங்கம் இணைய மறுப்பு

28-02-2020 04:14 PM

கோல்கட்டா :

  மத்திய அரசின், 'ஒரு நாடு, ஒரே ரேஷன் அட்டை' திட்டத்தில் இணைவதற்கு, மேற்கு வங்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்கிறார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மேற்கு வங்க மாநில அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. 'ஆயுஷ்மான்' எனப்படும் இலவச மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டத்தை செயல்படுத்த மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், மாநில உணவுத் துறை அமைச்சர் ஜோதிபிரியா மாலிக் கூறியுள்ளதாவது: ஒரு நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் குறித்து, மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு உள்ளதால், இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். மாநிலத்தில் ரேஷன் முறையை, 'டிஜிட்டல்' மயமாக்க, ஏற்கனவே, 200 கோடி ரூபாய் செலவிட்டுள்ளோம். அதை யார் திருப்பி தருவர். இதைத் தவிர மத்திய அரசு, எங்களுக்கு அளிக்க வேண்டிய, 6,000 கோடி ரூபாயையும் தரவில்லை. கருத்து வேறுபாடு உள்ளதால், ரேஷன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.Trending Now: