குடியாத்தம் தி.மு.க எம்.ஏல்.ஏ காத்தவராயன் காலமானார்

28-02-2020 12:43 PM

வேலூர்

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் உடல் நலக்குறைவால் காலமானார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன் உடல் நலக்குறைவால் காலமானார்.

குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மாரடைப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை காலமானார். அவர் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அறுவை சிகிச்சை முடிந்து 20 நாள்களாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று காலை 9.20 மணியளவில் காலமானார்.
ஆளுநர், ஸ்டாலின் இரங்கல்
இந்நிலையில் காத்தவராயன் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு குடியாத்தம் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு காத்தவராயன் வெற்றி பெற்றார்.
மறைந்த எம்.எல்.ஏ காத்தவராயன் திருமணம் செய்துகொள்ளவில்லை. தனியாக வசித்து வந்தார்.
திருவெற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கேபிபி சாமி வியாழனன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

கடந்த 2 நாளில், 2 திமுக எம்.எல்.ஏக்கள் உயிரிழந்துள்ளதால், சட்டப்பேரவையில் திமுக பலம் 98 ஆக குறைந்துள்ளது.Trending Now: