பிப்ரவரி 27 - இந்தியாவின் முதல் புரதச்சத்து தினம்

27-02-2020 07:37 PM

நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் முதன்மையாக கருதப்படுபவை மாவுச்சத்து (Carbohydrates) புரதச்சத்து (Protein) மற்றும் கொழுப்பு (Fat). இவற்றில் மனிதர்கள் மாவுச்சத்தையும் கொழுப்பையும் தங்கள் உணவில் அளவுக்கு மீறி சேர்க்கின்றனர். அதனால் நீரிழிவு நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

மாவுச்சத்து மற்றும் கொழுப்பு பற்றி தெரிந்துள்ளஅளவுக்கு இந்திய மக்களுக்கு புரதச்சத்து மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பெரியளவில் விழிப்புணர்வு இல்லை.

புரதச்சத்தால் மனித உடலுக்கு கிடைக்கும் பலன்கள் பின்வருமாறு :

நம் உடலில் தசை மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பது புரதச்சத்து. அதனால் நம் உடல் வலிமைக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது புரதம்.

ரத்த அழுத்தத்தை குறைக்கும். நம் உடலில் சேதமடையும் செல்களை விரைவில் சீராக்கி புதிய செல்களின் உற்பத்தியை உறுதி செய்வதும் புரதம்தான்.

புரதம் நம் உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும்.

கரு மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்துக்கும் புரதம் அவசியம்.

மேலும் புரதச்சத்தை தேவையாள அளவு உணவில் சேர்த்தால் அது பசியை தூண்டும். ஹார்மோன்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். ஆனால் உடல் எடை அதிகரிக்காது.

இவ்வாறு நம் உடல்நலனுக்கு மிக மிக அத்தியாவசியமான புரதச்சத்து குறித்த விழிப்புணர்வை இந்திய மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ரைட் டு புரோட்டின் (Right To Protein) என்ற தேசியளவிலான பொது சுகாதார இயக்கம் பிப்ரவரி 27ம் தேதியை புரதச்சத்து தினமாக அறிவித்துள்ளது.

உலக அளவில் பல நாடுகள் பிப்ரவரி 27ம் தேதியை புரதச்சத்து தினமாக அங்கீகரித்துள்ள நிலையில் இந்த வருடம் முதல் இந்தியாவும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளது.

இந்த தினத்தில் புரதச்சத்தின் வகைகள், சைவ மற்றும் அசைவ உணவு வகைகளில் கிடைக்கும் புரதச்சத்தின் அளவு, நம் அன்றாட உணவில் எவ்வளவு புரதச்சத்து இருக்க வேண்டும் உள்ளிட்ட விஷயங்களை இந்திய மக்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் ஊக்குவிக்கப்படும்

இந்த தகவல்களை ரைட் டு புரோட்டின் இயக்கம் தன் இணையத்தளத்தில் www.righttoprotein.com வெளியிட்டுள்ளது.

மேலும் ரைட் டு பிரோட்டின் இணையத்தளத்தில் உள்ள பிரோட்டின் –ஓ- மீட்டர் (Protein-O- Meter) உங்களுக்கு ஒரு நாளுக்கு எவ்வளவு புரதம் தேவை என்பதை கணக்குப் போட்டு கண்டுபிடிக்கலாம்

   கூடுதல் தகவல்கள் தொடரும்…….Trending Now: