கர்நாடக முதல்வர் எடியுரப்பாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

27-02-2020 04:07 PM

புது டில்லி,

கர்நாடக முதல்வர் எடியுரப்பாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் எடியுரப்பா இன்று தனது 77வது பிறந்தநாள் விழவை கொண்டாடி வருகிறார். அவருக்கு கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கர்நாடக  முதல்வர் எடியுரப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பாக்கத்தில் கூறியதாவது:

எடியுரப்பா மாநில முன்னேற்றத்திற்காக, குறிப்பாக உழவர் நலன் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக தீவிரமாக பணியாற்றி வருகிறார். அவர் நீண்டநாள் நல்ல உடல் நல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என மோடி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.Trending Now: