டில்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு

27-02-2020 12:02 PM

புதுடில்லி,

  குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக டில்லியில் நடைபெற்ற தொடர் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று காலை 34 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 4 நாட்கள் முன்பாக வடகிழக்கு டில்லியில் குடியுரிமை சட்டத்திருத்தத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கலவரம் வெடித்தது.

கலவரத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் புதன்கிழமை இரவு வரை டில்லி தலைமை காவலர் ரத்தன் லால், உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் டில்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்ததாகவும் என்.என்.ஜெ.பி மருத்துவமனை மற்றும் ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனை ஆகியவற்றில் தலா ஒருவர் உயிரிழந்ததாக இன்று தகவல் வெளியானது.

அதன் காரணமாக இன்று டில்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.bடில்லி வன்முறை சம்பவங்களில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Trending Now: