15 நகரங்களில் பரோடா ஸ்டார்ட் அப் வங்கி தொடக்க திட்டம்: நிதிச் செயலாளர் அறிவிப்பு

26-02-2020 08:43 PM

புது டில்லி,

15 நகரங்களில் பரோடா ஸ்டார்ட் அப் வங்கி தொடக்க திட்டமிட்டுள்ளதாக நிதிச் செயலாளர் ராஜீவ் குமார் இன்று தெரிவித்தார்.

இந்த வங்கி புதிதாக தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவன்ங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தது 2000 தொடக்க  நிறுவனங்களுடன்  இணைப்பை ஏற்படுத்துவதற்கும்  திட்டமிட்டுள்ளதாக ராஜீவ் குமார் தெரிவித்தார்.

இந்த ஸ்டார்ட்- அப்களின் தனித்துவமான மற்றும் சிறப்பு வங்கி தேவைகளை மனதில் கொண்டு .செயல்படுத்தியுள்ளோம். 

நடப்பு கணக்குகள், பேமென்ட் கேட்வே, கார்ப்பரேட் கிரெடிட் கார்டுகள், கார்ப்பரேட் சம்பள கணக்குகள், கடன் வசதிகள் என நிறுவனத்திற்கு தேவையான அனைத்தும் இதில் அடங்கும்.என ராஜீவ் குமார் கூறினார்.

 

 Trending Now: