25-02-2020 04:16 PM
தாய்மை மகத்துவம்!
அந்த அன்பு தாய், கடைசி காலத்தில் நோயில் கிடந்து துடித்தபோது, துடித்துப்போன ராஜா நான்கு டாக்டர்கள், இரண்டு நர்சுகளை ஏற்பாடு செய்து, தொடர்ந்து தனது தாயாரைக் கவனிக்கச் செய்தார்.
ஆனாலும், மரணம் அந்த அன்பு அன்னையை அழைத்துக் கொண்டது.
அப்போது உறைந்து போன ராஜாவின் கண்ணீர், இப்போதும் தனிமையில் ஈரமாகக் கசிகிறது.
‘என் தாய் என்னும் கோவிலை
காக்க மறந்துட்ட பாவியடி கிளியே'
என்று தான் பாடிய பாடலில் அன்னையின் அருமையை, பிரிவை, எழுதி பாடினார் ராஜா. இது போன்று தாம் எழுதி பாடிய பல பாடல்களின் தாய்மையின் மகத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.
ராஜாவினால் 'அம்மா' என்ற தெய்வீக உருவத்தை பாடல்களாக பெற்றது தமிழ்த் திரையுலகம்.
ராஜாவின் நகைச்சுவை உணர்வு!
இளையராஜாவுக்கு, நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. ஒரு முறை ராஜாவும் அமரனும் திருச்சிக்குப் பக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தனர்.
"அமர்! பக்கத்துல குணசீலம்ங்கிற ஊரில் உள்ள கோயில் இருக்கு. அங்கே பைத்தியம் குணமாகிறதுக்கு பிரசித்தி பெற்றது. நீ அவசியம் போகணும்” என்றார் ராஜா. “என்ன விசேஷம்?” - கங்கை அமரன் கேட்டார்.
“அங்கே போனா தீராத பைத்தியம் கூட குணமாயிடுமாம்” - என்றார் ராஜா. “எனக்கு நம்பிக்கை இல்லை ” – அமரன்
“ஏன்?” - ராஜா.
"ஏற்கனவே போயிட்டு வந்த உனக்கே இன்னும் குணமாகலையே?” - சிரிக்காமல் சொன்னார் அமரன். அதைக் கேட்டு சத்தம் போட்டு சிரித்தார் ராஜா.
நட்பில் விரிசல் ஏன்?
அவருக்கு இசையில் அதிக நாட்டம் உண்டு. சரி அந்த டைரக்டருக்கு யாருடைய பாடல்கள் பிடிக்கும்?
"பொதுவாக எல்லா இசையும் பிடிக்கும் என்றாலும் என் இளையராஜாவின் இசை பிடிப்பதுபோல் வேறு எந்த இசையும், எந்த நிலையிலும் என் இதயம் கவர்ந்ததில்லை ” என்று உணர்ச்சி பொங்க பேசும் அவர் இயக்குநர் இமயம் பாரதிராஜாதான்.
இத்தனை பாசம் கொண்ட இவருக்கும் ராஜாவுக்கும் இடையில் ஏன் இடைவெளி? வறுமையில் வாடும்போது இருந்த நெருக்கமான நட்பும் வசதியும் புகழும் வந்த பிறகு இயல்பாக இணைய முடியவில்லை . அது ஏன்? - வேதனை கலந்த புதிர்!
தைரியம் இழக்காதே!
ஒரு சமயம் சிவா விஷ்ணு கோயிலில் உட்கார்ந்து கஷ்ட காலம் எப்போ முடியும் என மனசுல நெனச்சுட்டே ஒரு பெருமூச்சு விட்டேன். அருகில் ஒரு பெரியவர் அந்தப் பெருமூச்சிலிருந்தே என் நிலைமையைப் புரிந்து கொண்டவராக என் பக்கம் திரும்பி அமர்ந்தார்.
‘‘தம்பி! நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டாலும் தைரியத்தை மட்டும் விட்டுவிடக்கூடாது, தைரியத்தை மட்டும் நாம் கொண்டுவிட்டால் எல்லாமே கைகூடிவிடும்” என்று கூறினார்.
தைரியலட்சுமியைக் கைவிடாதிருந்ததால் எப்படி ஒரு இளவரசன் தோல்வி நிலையிலிருந்து வெற்றி வீரனாக மாறினான் என்ற கதையையும் சொன்னார்.
அதைக் கேட்டு புது நம்பிக்கையுடன் அறைக்குத் திரும்புகிறேன். இளையராஜா, கங்கை அமரன், பாரதிராஜா ஆகியோர் என்னைப் பத்து ஆச்சரியப்படுகிறார்கள். கையில் காசு இல்லாமல் எப்படி இந்த பாஸ்கர் உற்சாகமாக இருக்கிறான் என நினைப்பதுபோல் தெரிந்தது.
அப்போது வெளியிலிருந்து ஒரு குரல் வருகிறது.
இங்கே ஹார்மோனியம், தபேலா, கிடார் வாசிக்கிற பையன்க இருக்கிறாங்களாமே? அவங்க ரூம் எது?” என்று வாட்ச்மேனி டம் சோ விசாரிக்கி றார்!