நியூசி - இந்திய அணிகளிடையே 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

11-02-2020 12:51 PM

மவுன்ட்மாங்கானு,

நியூசிலாந்து - இந்திய அணிகளிடையே 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில்  7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்து உள்ளது.

ஒரு கிரிக்கெட் போட்டியில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இன்று ஓயிட்வாஷ் செய்யப்பட்டுள்ளது.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரண்டு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது

ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் ஹாமில்டனில் நடைபெற்றது முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும்,

ஆக்லாந்தில் நடைபெற்ற 2ம் ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வெற்றியுடன் முன்னிலை வகிக்கிறது.

இன்று 3வது போட்டி

நியூசிலாந்து - இந்திய அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.  

இந்திய அணி பேட்டிங் செய்தது.  

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா (40), மயங்க் அகர்வால் (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கோலி (9), ஸ்ரேயாஸ் (62) ரன்களில் வெளியேறினர்.  

கே.எல். ராகுல், மணீஷ் பாண்டேயுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். ராகுல் சதம் விளாசினார்.  இவற்றில் 1 சிக்சர் மற்றும் 9 பவுண்டரிகளும் அடங்கும்.

 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்துள்ளது.  

நியூசிலாந்து அணியில் பென்னட் 4 விக்கெட்டுகளையும், ஜாமிசன், நீஷம் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.

இதனால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 297 ரன்களை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.  

நியூசிலாந்து அணி பேட்டிங்

நியூசிலாந்து அணி 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 104 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

47.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்து இந்திய அணியை வீழ்த்தியது நியூசிலாந்து அணி.

3 போட்டிகளையும் வென்று ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

ஒரு கிரிக்கெட் போட்டியில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இன்று ஓயிட்வாஷ் செய்யப்பட்டுள்ளது.Trending Now: