குடியரசு தின ராணுவ விருதுகள், போலீஸ் விருதுகள் அறிவிப்பு

25-01-2020 04:17 PM

புதுடெல்லி

இந்தியாவின் 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ராணுவ பதக்கங்கள் மற்றும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பரம விசிஷ்ட சேவா பதக்கம்
யுத்த சேவா விருதுகள்

பரம விசிஷ்ட சேவா பதக்கம் 19 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6 பேருக்கு தீரச் செயலுக்கான சௌரிய சக்ரா விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த சேவா விருதுகள் 8 பேருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேனை பதக்கங்கள் 151 பேருக்கு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ்  வீரச்செயல்

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசு தினத்தை ஒட்டி அல்லது சுதந்திர தினத்தையொட்டி போலீஸ் தீரச்செயல் பழக்கங்கள் அறிவிக்கப்படுவது பழக்கம். 71 வது குடியரசு தினத்தை ஒட்டி மொத்தம் 1040 போலீஸ் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதில் 93 பதக்கங்கள் தலைசிறந்த சேவைக்கான சேவைக்காக வழங்கப்பட்டுள்ளன

இது தவிர குறிப்பிடத்தக்க சிறப்பு சேவைக்கான பதக்கங்கள் 657 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன.

மத்திய போலீஸ் படை பிரிவில் எல்லைக் காவல் படை படைக்கு 9 போலீஸ் வீரச்செயல் பழக்கங்களும், சாஸ்திர சீமா பால் படைப் பிரிவுக்கு 4 பதக்கங்களும் ரயில்வே பாதுகாப்பு படைக்கு ஒரு ஒருபக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மாநில போலீஸ் படைக்கு பதக்கங்கள்

மாநில போலீஸ் பிரிவுகளில் போலீஸ் தீரச் செயல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 ஜார்க்கண்ட் மாநில போலீஸ் படை 33 பதக்கங்களும்,

ஒடிசா மாநில காவல்துறை 16 பதக்கங்களும்,

டெல்லி போலீஸ் படை 12 பதக்கங்களும்,

மகாராஷ்டிர போலீஸ் படை 10 பதக்கங்களும்,

சட்டீஸ்கர் போலீஸ் படை 8 பதக்கங்களும்,

பீகார் போலீஸ் படை 7 பதக்கங்களும்

பஞ்சாப் போலீஸ் படை 4 பதக்கங்களும்

மணிப்பூர் போலீஸ் படை 2  பதக்கங்களும் பெற்றுள்ளன.

சிஆர்பிஎஃப்-க்கு கூடுதல் பதக்கங்கள்

பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் நக்சல்பாரிகளின் நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிகளில் பெரும்பான்மையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை செயல்பட்டு வருகிறது. எனவே மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு 75 தீர செயலுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கோப்ரா படைப்பிரிவை சேர்ந்த வீர்ர் ஒருவருக்கு அவரது மறைவுக்குப்பின் தீர செயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களில் மிகக் கூடுதலான வீரச்செயல் விருதுகளை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் பெற்றுள்ளனர்.

 ஒட்டுமொத்தமாக தீரச்செயலுக்காக அகில இந்திய அளவில் வழங்கப்பட்ட 290 விருதுகளில் 108 விருதுகள் ஜம்மு-காஷ்மீர் போலீசாருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Trending Now: