சீனாவில் கரோனா வைரஸ் சிகிச்சையில் ராணுவ மருத்துவர்கள்

25-01-2020 01:13 PM

பெய்ஜிங்

சீனாவின் வு கான்  நகரில் தோன்றி சீனாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் பரவிவிட்ட கரோனா வைரஸ் சீனாவில் பெரிய சுகாதார நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிவில் மருத்துவர்களின் எண்ணிக்கை போதவில்லை. அதனால் ராணுவ மருத்துவர்களை கரோனா வைரஸ் சிகிச்சை பணியில் அரசு ஈடுபடுத்தியுள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் தாக்கிய காரணத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக சனிக்கிழமை உயர்ந்துள்ளது.

மேலும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் 1,287 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 237 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

சீனாவில் இருந்து கரோனா வைரஸ் இப்பொழுது வெளிநாடுகளுக்கும் பரவிவிட்டது.ஹாங்காங், தைவான், மக்காவ்,  நேபாளம், ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம், அமெரிக்கா ஆகிய நாடுகளில் கரோனா வைரஸ் நோயாளிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா கவலை

சீனாவின் வு கான்  மற்றும் ஹூப்பெய்  ஆகிய இரண்டு மாகாணங்களில் மொத்தம் 700 இந்திய மாணவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த 700 பேருடன் சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் தொடர்ந்து தொடர்புகொண்டு அவர்களின் நிலையை அறிந்து வருகிறது.

இந்திய மாணவர்கள் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 8 பேர் வு கான் நகரில் சிக்கியுள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை ஒன்றை கட்ட சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 25,000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள நிலத்தில் மருத்துவமனை 10 நாட்களில் கட்டப்பட வேண்டும் பிப்ரவரி 3ம் தேதி மருத்துவமனை தயாராக இருக்க வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டுள்ளது  .

இதைத்தொடர்ந்து கட்டுமான தளத்தில் ஏராளமான கட்டுமான எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இங்கு பணியாற்ற முன் வருகிற சீன தொழிலாளர்களுக்கு வழக்கமான சம்பளத்தை போல மூன்று மடங்கு கூடுதலாக அணிவிக்கப்படுகிறது ஒரு நாளைக்கு 173 அமெரிக்க டாலர் சம்பளமாக வழங்கப்படுகிறது.

ஏற்கனவே சார்ஸ் வைரஸ் தாக்குதல் நடந்த பொழுது ஒரு சிறப்பு மருத்துவமனை சீனாவில் கட்டப்பட்டது. அந்த மருத்துவமனை சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டதால். அதே போல கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தனிச்சிறப்பு மருத்துவமனைஅமைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

சீன மருத்துவர்களும் அமெரிக்க மருத்துவர்களும் இணைந்து

கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு ஊசி மருந்தைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.Trending Now: