காவலர் குடியிருப்பு ஒதுக்கீடு, ஆன் லைன் இணையவழிப் பணியாக மாற்றம்

25-01-2020 12:44 PM

சென்னை

தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவல்துறையினருக்கான காவலர் குடியிருப்பு ஒதுக்கீடு, இனிமேல் இணையவழி மூலம் நடைபெறும் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவு படி, காவலர் குடியிருப்புகள் வேண்டி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், இணையவழி மூலம் சமர்ப்பிக்க www.policequarters.org என்ற வலைதளம் குடியரசு தினமான  26.01.2020 அன்று முதல் துவக்கப்படுகிறது.

இதன் படி அனைத்து காவல் துறை அதிகாரி / பணியாளர்களுக்கும் இணையவழி மூலம் குடியிருப்புகள் விண்ணப்பிக்கவும் ஒதுக்கீடு செய்யவும் முடியும்

இந்த மென்பொருளின் முக்கிய பயன்பாடுகள்

அ)  அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் காலியாக உள்ள குடியிருப்புகளின் விவரங்களை இணையம் மூலம் அறியலாம்.

ஆ) அனைத்து காவல் அதிகாரிகள் / ஆளிநர்கள் தங்களது விண்ணப்பங்களை இணைய வழி மூலம் சமர்ப்பிக்க முடியும். பதிவு செய்தவுடன் காத்திருப்பு பட்டியல் வரிசை எண் தனிநபரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

இ) இது ஒதுக்கீட்டின் வெளிப்படை தன்மையையும் மற்றும் காத்திருப்பு பட்டியலின் மூப்பு தன்மையையும் உறுதி செய்யும்.

ஈ) மேலும், இணையவழி மூலம் காவலர் குடியிருப்புகளுக்காக விண்ணப்பிக்கும் போது, தனி நபர் விருப்பத்தின் படி குடியிருப்பை தேர்ந்தெடுப்பது சாத்தியமாகும்.Trending Now: