துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் பலி

25-01-2020 11:26 AM

எலாஜிக் (துருக்கி),

   துருக்கி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 20 பேர் உயிரிழந்தனர்.

துருக்கியின் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் அங்காராவில் இருந்து 750 கிமீ தொலைவில், எலாஜிக் மாகாணம் சிவிரைஸ் நகரை மையமாக் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்தது. அருகில் உள்ள 4 மாகாணங்களிலும் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக எலாஜிக் மற்றும் மலாத்யா மாகாணங்களில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்னளர்.
எலாஜிக் மற்றும் மலாத்யா மாகாணங்களில் நிலநடுக்க பாதிப்பினால், 20 பேர் உயிரிழந்தனர்.
1,015க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேலும் சிலர் இன்னும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.Trending Now: