தலைவர்களின் சிலையை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

24-01-2020 06:31 PM

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள பெரியார் உள்ளிட்ட எந்த தலைவர்களின் சிலையையும் சேதப்படுத்தினால், குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த கலியப்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையின் கை மற்றும் முகம் ஆகியவை உடைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக காஞ்சிபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிறுவப்பட்டுள்ள தலைவர்களின் சிலையை சேதப்படுத்தினால், குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக டிஜிபி திரிபாதி வெளி அறிக்கை:

'பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலையை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் டிஜிபி திரிபாதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.Trending Now: