சீனாவில் கொரோனா வைரஸ் பதிப்பு: 13 நகரங்களில் பொதுப் போக்குவரத்து முடக்கம்

24-01-2020 03:30 PM

பெய்ஜிங்,

   சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதையடுத்து 8 நகரங்களில் பொது போக்குவர்த்து முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த 13 நகரங்களில் இருந்து கரோனா வைரஸ் தொற்று மற்ற இடங்களுக்கு பரவுவதைக் கட்டுப்படுத்தவே இந்த கரங்கள் தனிமைப படுத்தப்பட்டுள்ளன.

.சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு 1.1 கோடி பேர் வசித்து வரும் வுகானில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.  வைரஸ் தாக்குதலுக்கு முதலில் 3 பேர் உயிரிழந்தனர் என வுகான் நகர சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வைரஸ் தற்பொழுது 830 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்றும் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்து உள்ளது என்றும் சீன சுகாதார அதிகாரிகள் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.

8 நகரங்கள் மூடல்

இதையடுத்து ஹூபே மாகாணத்தில் எட்டு நகரங்கள் வுஹான், ஹுவாங்காங், ஈஜோ, சிபி, சியான்டாவோ, கியான்ஜியாங், ஜிஜியாங் மற்றும் லிச்சுவான் ஆகிய 13 நகரங்களில் பொது போக்குவரத்துக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் நகரை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வுகான் நகரில் மருத்துவம் மற்றும் பிற படிப்புகளை படித்து வரும் 700 இந்திய மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டனர்.  அவர்களில் பலர் விடுமுறையை முன்னிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

சீனா புத்தாண்டு கொண்டாட்டம்

மற்ற நகரங்களுக்கு மூடப்பட்ட நகரங்களின் மக்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம் என்றும் வெளியேறினால் கட்டாயம் முக மூடி அணியவேண்டும் என்று சீனா அரசு வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே சீனாவிலிருந்து ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது.

தற்பொழுது சிங்கப்பூரில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதை அந்நாட்டு அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இது மேலும் பரவாமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

குடியரசு தின விழா ரத்து

கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைவதால் பெய்ஜிங்கில் இந்திய குடியரசு தின விழாவை இந்திய துதராகம் ரத்து செய்துள்ளது. 70வது குடியரசு தின விழாவை பெய்ஜிங்கில் கோலாகலாமாக கொண்டாட இந்திய துதராகம் முடிவு செய்திருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் விழாவை ரத்து செய்துள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் இருந்து சீனா முழுவதும் பரவி விட்ட கொரோனா வைரஸ் முதலில் உணவாகப் பயன்படுத்தப்படும் பாம்புகள், வெளவால் மூலம் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சீன நிபுணர்கள் கருதுகின்றனர்.

மும்பையில் 2 பேருக்கு கொரோனா வைரஸ்?

மும்பையில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய இருவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ள 2 பேரும் தனி வார்டில் சேர்க்கப்பட்டு தற்பொழுது  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.Trending Now: