வரியை உயர்த்தினால் பொருளாதாரம் பாதிக்கும்

24-01-2020 03:22 PM

இந்தியாவில் கார் உற்பத்தி, விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் மாருதி சுசுகி.இந் நிறுவனத்தின் சேர்மன் ஆர்.சி.பார்கவா, இந்திய வாகனத்துறையில் 40 வருட அனுபவம் உள்ளவர். இவர் சென்ற வருடம் வாகனத்துறைக்கு சரிவு காலம் என்கின்றார். சென்ற வருடம் அரசின் நடவடிக்கைகளால் கார்களின் விலை அதிகரித்தது. இதுவே கார் உட்பட வாகனங்களின் விற்பனை சரிவுக்கு காரணம். அரசின் வருவாய் இழப்பை ஈடுகட்ட கார்களுக்கு வரியை அதிகரிப்பதால் பொருளாதாரமும், வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றார்.

அவர் பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழ் நிருபர் அரிந்தம் மஜும்தாருக்கு அளித்த பேட்டி:

கேள்வி: சென்ற வருடம் (2019), இது வரை இல்லாத அளவு வாகன உற்பத்தி துறைக்கு பாதிப்பு ஏற்பட்டதே?

பதில்: விற்பனை என்ற அளவு கோலை எடுத்துப் பார்த்தால் மிக மோசமான வருடம். பல விதங்களில் அசாதரணமா வருடம். இதற்கு முன் எப்போதும் இல்லாத மாதிரி தொழில்நுட்ப மாற்றத்தை எதிர் கொண்டது. (பாரத் ஸ்டேஜ் நான்கில் இருந்து ஆறுக்கு மாறியது). இதற்கு முன் இந்த தொழில்நுட்ப மாற்றங்களின் போது, இப்போது இருப்பது போல் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு, பாரத் ஸ்டேஜ் நான்கு வாகனங்களை பதிவு செய்ய கூடாது என்று இல்லை. இந்த காலக்கெடு வாகன உற்பத்தியாளர்களுக்கு மிகுந்த கஷ்டத்தை ஏற்படுத்தியது. மார்ச் 31ம் தேதிக்கு பிறகு, பாரத் ஸ்டேஜ் நான்கு வாகனங்களை இருப்பு வைத்திருக்க முடியாது என்ற நிலையில் உற்பத்தி செய்வதிலும், விற்பனை செய்திலும் மிகுந்த பிரச்னை ஏற்பட்டது. அத்துடன் வருட முடிவில் பாரத் ஸ்டேஜ் நான்கு வாகனங்களை குறைந்த விலையில் விற்பனை செய்வார்கள் என்று மக்கள் கருத தொடங்கினார்கள். இந்த தொழில்நுட்ப மாற்றம் பிரச்னைகளை உண்டாக்கியது.

இரண்டாவதாக 2019ல் நடைமுறைப் படுத்தப்பட்ட அதிக பாதுகாப்பு, மாசு கட்டுப்பாடு காரணமாக வாகனங் களின் விலை அதிகரித்தது. மூன்றாவதாக ஒன்பது மாநிலங்களில் வரி வருவாய் குறைந்ததால், வரி உயர்த்தப் பட்டது. அரசின் கொள்கைகளை வகுப்பவர்கள் , வரியை உயர்த்த வேண்டும் எனில், மது, சிகரெட், கார்கள் மீதான வரியை உயர்த்தினால் போதும் என்று கருதுவதாக நினைக்கின்றேன். அதே நேரத்தில் வங்கிகள் நஷ்டத்தால் கவலைப்பட்டு, கடன் கொடுக்கும் விதிமுறைகளை கடினப் படுத்தினர். இதனால் கார் வாங்க நினைக்கும் பல வாடிக்கை யாளர்கள், கடன் வாங்க தகுதி இல்லாமல் ஆனார்கள். இந்தியாவில் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது. அவர்களிடம் பணம்  இல்லாத போது என்ன செய்ய முடியும்.

கேள்வி: ஓலா, உபேர் போன்ற கார் வாடகை நிறுவனங்

களால், இந்த எதிர்பார்ப்பு குறையவில்லையா? இந்தியர் கள் இனி சொந்தமாக கார் வாங்குபவர்களாக இருக்க மாட்டார்களே….

பதில்: அப்படி இல்லை. புதிய தலைமுறையினர் மத்தியில் கார் விற்பனையில் ஓலா, உபேர் போன்றவை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முந்தைய தலைமுறையினரை ஒப்பிடுகையில் புதிய தலைமுறையினரின் வாழ்க்கை வேறுபட்டது. இவர்களுக்கு சொந்தமாக கார் இருப்பது முக்கியமல்ல. இவர்கள் விருந்துகள், விடுமுறை சுற்றுலா செல்வது என்று உள்ளனர். இவர்களுக்கு கார் வாங்குவதை விட, மற்ற விஷயங்களுக்கு செலவழிக்க பணம் வேண்டும் என்று கருதுகின்றனர்.

கேள்வி: இந்த புதிய தலைமுறையினர் கார் விற்பனையில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்து வார்களா?

பதில்: தற்போது இல்லாவிட்டாலும் கூட, நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இவர்களின் மன ஓட்டத்தை வாகன உற்பத்தி நிறுவனங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது பெரிய நகரங்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். டில்லி, மும்பை ஆகிய நகரங்களில் அதிக அளவு விற்பனையாகாது.

கேள்வி: இந்த மனமாற்றம் வாகன உற்பத்தியாளர்களை கவலைக்குள்ளாக்குகிறதா?

பதில்: இல்லை. இது வாகன விற்பனையில் தற்காலிக பாதிப்பை ஏற்படுத்தும். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். சொந்தமாக கார்களை வைத்திருப்பவர்களை விட, வாடகைக்கு கார் ஓட்டுபவர்கள் குறுகிய காலத்தில் பழைய காருக்கு பதிலாக புதிய கார் வாங்குவார்கள். சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் 15 வருடத்திற்கு பிறகு புதிய கார் வாங்குவார்கள். வாடகை கார்களை ஓட்டுபவர்கள் நான்கு வருடத்திற்கு பிறகு புதிய கார் வாங்குவார்கள். இவ்வாறு புதிய கார்களை வாங்கும் போது, கார்கள் விற்பனை அதிகரிக்கும். சொந்தமாக கார்களை வாங்குவது குறைவதால் ஏற்படும் விற்பனை பாதிப்பு, ஓலோ,உபேர் போன்ற வாடகை கார்களை வைத்திருப்பவர்கள், புதிய கார்களை வாங்கும் போது சரிக்கட்டப்படும்.

கேள்வி: இந்த வருடம் எப்படி இருக்கும்?

பதில்: வாங்கும் சக்தியே விற்பனையை தீர்மானிக்கிறது. சென்ற பத்தாண்டு வாகன உற்பத்தி துறை 8 சதவிகித வளர்ச்சி அடைந்தது. ஆனால் இப்போது வாகனங்களின் விலை

யால், எட்டு சதவிகித வளர்ச்சி கூட இருக்காது என்று கருதுகின்றேன். கடன் வாங்கி கார்களை வாங்கும் சிறிய ரக கார்களை பற்றி கூறுகின்றேன். சென்ற வருடத்தைப் போல் கார்களின் விலை 20 சதவிகிதம் அதிகரித்தால், எப்படி ஒருவரால் கார்களை வாங்க பணத்தை திரட்ட முடியும்.

கேள்வி: உள்நாட்டு உற்பத்தி குறைவதும்,

ரூ. 350 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி இலக்கும் முரண்பாடாக உள்ளதே?

பதில்: உற்பத்தி துறையில் வாகன உற்பத்தியின் பங்கு 16 சதவிகிதம். இந்த துறையில் உற்பத்தி குறைவது, ஒட்டு மொத்த உற்பத்தி துறையை பாதிக்கும். இதன் துணை தொழில்களையும் பாதிக்கும். இதை நேரடியாகவே பார்க்கின்றோம். கார்களின் வரியை உயர்த்துவதால்,வரி வருவாய் அதிகரிக்காது என்பதை அரசு உணர வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரியை உயர்த்துவதால் உற்பத்தி மேலும் குறையும். ஏனெனில் வாங்கும் சக்தி அதிகரிக்காது. வாங்கும் சக்தியை அதிகரிக்க அரசு சிந்திக்க வேண்டும்.

கேள்வி: சிறிய ரக டீசல் கார்களை உற்பத்தி செய்வதை நிறுத்துவது குறித்து மாருதி மறுபரிசீலனை செய்யுமா?

பதில்: ஏப்ரலுக்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை காலம் தான் தீர்மானிக்கும். இதன் விலையே தீர்மானிக்கும். பெட்ரோல், டீசல் விலை வித்தியாசம் குறை வதால், டீசல் கார் பயன்படுத்துவதன் பலன் குறைகிறது. டீசல் காரினால் பலன் குறையும் போது, வாடிக்கையாளர் 1.3 லிட்டர் டீசல் கார் வாங்க அதிக விலை கொடுக்க முன்வருவார்களா என்பதை பார்க்க வேண்டும்.

கேள்வி: ஆனால் உங்கள் போட்டியாளர்கள் டீசல் கார் தயாரிக்க உள்ளனரே?

பதில்: ஆம். ஹூன்டாய் நிறுவனம் பாரத் ஸ்டேஜ் ஆறு ரக காருக்கு, ரூ.50 ஆயிரம் அதிக விலை வைப்பதாக கூறியுள்ளது. ஆனால் இது சாலையில் ஓடுவதற்கு தகுந்த நிலை ஏற்படும் போது, இதன் விலை ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்கள் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் விலை வித்தியாசம் மிக குறைவாக இருக்கும் போது, டீசல் காருக்கு அதிக விலை கொடுத்து வாங்க முன்வருவார்களா? சில மாநிலங்களில் பெட்ரோல் விலையை விட, டீசல் விலை அதிகமாக உள்ளது. அப்போது என்னவாகும். எனவே இது பற்றி (டீசல் கார்) எதையும் கூற விரும்பவில்லை.

கேள்வி:  மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்வதில் மாருதி சுசுகி ஏன் தயக்கம் காண்

பிக்கிறது? உங்களது போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தி யுள்ளனரே?

பதில்: எங்கள் கவனம் தொழில்நுட்பம் கிடைப்பதும், வாங்கும் விலையில் இருப்பதுமே. இதற்கான பேட்டரியும், மற்ற வசதிகளும் உள்ளதா. (இவை இல்லாத போது) யார் மின்சார கார்களை வாங்குவார்கள்.  

கேள்வி: உங்களை போன்ற பெரிய நிறுவனங்கள் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையை நிறு வலாமே?    

பதில்: எங்களால் முடியாது. அடுத்து நீங்கள் சாலை போடுமாறு கூட கூறலாம். அது எங்கள் வேலையல்ல.

கேள்வி: மின்சார கார்களுக்கு மாறுவது நடக்குமா? அல்லது நடக்காதா?

பதில்: அப்படி நடக்க வேண்டும் எனில் பேட்டரிக்கான தொழில்நுட்பமும், இதன் விலையும் ஸ்திரமாக இருக்க வேண்டும். பேட்டரி விலை 70 டாலருக்கு குறைந்தால், மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. யாராவது பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கலாம். அரசு மானியங்களை அறிவித்தும் கூட, ஏன் பெரிய நிறுவனங்கள் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்க முன்வரவில்லை. ஏனெனில் பேட்டரியின் விலையே. இந்த விலைக்கு யாரும் வாங்க முன்வரமாட்டார்கள்.

பெட்ரோல், டீசல் விலையில் சிறிய அளவே வித்தியாசம் இருப்பதால், டீசல் கார்களை பயன்படுத்துவதால் பெரிய அளவில் பலன் இல்லை.

நன்றி: பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் அரிந்தம் மஜும்தார்.Trending Now: