பட்டினியில் வாடும் சிங்கங்கள்

24-01-2020 03:14 PM

ஆப்பிரிக்க நாடான சூடானில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இது சிங்கம் போன்ற வனவிலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. சூடான் தலைநகர் அல்–குரேஷி விலங்கியல் பூங்காவில் ஐந்து சிங்கங்களை வளர்த்து வருகின்றனர். இந்த விலங்குகளை பராமரிக்க அரசு நிதி ஒதுக்கவில்லை. தனியார் வழங்கும் நிதி மூலம் சிங்கங்

களுக்கு தேவையான உணவு, மற்ற பராமரிப்பு பணிகள் செய்யப் படுகிறது. சில மாதங்களாக சிங்கங்களுக்கு உணவு, மருந்து போன்றவை வாங்க பணம் இல்லாமல் விலங்கியல் பூங்கா நிர்வாகம் திண்டாடி வருகிறது. சிங்கங்களுக்கு போதிய உணவு கிடைக்காமல், அவை வாடி வதங்கி எலும்பும் தோலுமாக காட்சி யளிக்கின்றன. இந்த சிங்கங்களின் படங்கள் இணையத்தில் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டியின் வாடி ஒரு சிங்கம் உயிரிழந்துள்ளது. மற்ற நான்கு சிங்கங்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன.  

Trending Now: