சிறுவனின் கழுத்தை துளைத்த ஊசி மீன்

24-01-2020 03:14 PM

இந்தோனிஷியாவில் பெற்றோருடன் மீன் பிடிக்கச் சென்ற ஒரு சிறுவன் மீது ஊசி மீன் பாய்ந்துள்ளது. முகமது இதுல் (16) என்ற சிறுவனின் கழுத்தை ஊசி மீன் துளைத்து சென்றுள்ளது. இந்த வகை மீனின் வாய் கூர்மையாக இருக்கும். இவை மணிக்கு 60 கி.மீட்டர் வேகத்தில் தண்ணீரில் இருந்து வெளியே பாயும். அவ்வாறு ஊசி மீன் பாயும் போது, முகமது இல் கழுத்தில் பாய்ந்து மறுபக்கம் வந்துள்ளது. அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் மூன்று மருத்துவர்களும், இரண்டு மயக்கவியல் மருத்துவர்களும் இரண்டு மணி நேரம் போராடி மீனை கழுத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.Trending Now: