உடும்பை விழுங்கிய மலைப்பாம்பு

24-01-2020 03:11 PM

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ் லாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் வீட்டின் கூரையில் ஒரு மலைப்பாம்பு தொங்கிக் கொண்டு இருந்தது. அதன் வாய்க்குள்ளிருந்து பாதி உடும்பின் உடல் தெரிந்துள்ளது. இந்த அரிய காட்சியை பார்த்த பலரும் புகைப்படம் எடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வனவிலங்குகள் உணவை யும், தண்ணீரையும் தேடி ஊருக்கும் வருவது அதி கரித்துள்ளது. கார்ப்பரேட் வகை மலைப் பாம்புகள் வீடுகளின் கூரைகளில் பதுங்கி பூனை, புறா போன்றவைகளை பிடித்து விழுங்கு கின்றன. இவ்வாறு உணவு தேடி வந்த மலைப்பாம்புக்கே உடும்பு இரையாகி யுள்ளது.

***

Trending Now: