சிறுமியின் வயிற்றில் காந்த உருண்டைகள்

24-01-2020 03:10 PM

ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட காந்த உருண்டை களை ஆன்லைனில் வாங்கிய சிறுமி அதை விழுங்கியுள்ளார். அந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்தவர் ரெபிகா. இவரது மகள் ஒலிலியா (7). இந்த சிறுமி காந்த உருண்டை களை வைத்து விளையாடிக் கொண்

டிருந்தார். அப்போது திடீரென பக்கத்து அறையில் இருக்கும் அம்மாவை கத்தி அழைத்துள்ளார். தான் காந்த் உருண்டைகளை விழுங்கிவிட்டதாகவும், வயிறு வலிப்பதாகவும் கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த தாய், மகள் ரெபிகாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமி ஒலிலியாவை மருத்து வர்கள் ஸ்கேன் செய்து பார்த் துள்ளனர். ஸ்கேனைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந் துள்ளனர். சிறுமி ஒலிலியா சிறிய அளவு உள்ள காந்த உருண்டைகளை அதிக அளவில் விழுங்கியுள்ளார். அவை செரிமானம் ஆகும் இடத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் காந்த உருண்டையை விழுங்கிய மற்றொரு சிறுவனையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். மருத்துவர்கள் இரண்டு பேரின் வயிற்றில் இருந்த காந்த உருண்டைகளை வெளியில் எடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் காந்த உருண்டைகள் தடை செய்யப்

பட்டிருந்தாலும், பலர் ஆன் லைனில் வாங்குகின்றனர். இவற்றை குழந்தைகளிடம் கொடுக்க கூடாது என மருத்து வர்கள் எச்சரித்துள்ளனர்.

Trending Now: